உங்களுக்கு பணக்காரர் ஆகவேண்டும் என்ற விருப்பமில்லை என்றாலும், வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது. போதிய பணத்தை சம்பாதிப்பது மூலமாக நீங்கள் விரும்பும் இடத்தில் வாழலாம், தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளலாம், உங்கள் அன்புக்குரியவரை கவனித்துக் கொள்ளலாம், உங்களுக்கு பிடித்தவற்றை உண்ணலாம், பல பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். பணம் நம் வாழ்வில் முக்கியமான பகுதியாக உள்ளது. எனவே இந்த 2024ல் உங்களைப் பணக்காரராக மாற்றும் 5 தலை சிறந்த திறன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கவனம் (Focus): இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் என்பது மனித குலத்திற்கு வரமாகவும் சாபமாகவும் உள்ளது. இதன் மூலமாக உலகெங்கிலும் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றாலும், நாம் பயன்படுத்தும் கேஜட்கள் நம்முடைய கவனத்தை அதிகம் சிதறடிகின்றன. ஒவ்வொரு நாளும் உங்களது கவனத்தை சிதறடிக்க ஏதோ ஒரு கேஜட் அதிக காரணமாக இருக்கிறது. எனவே இதைப் புரிந்துகொண்டு தினசரி குறைந்தது 2 மணி நேரமாவது எந்த கவனச்சிதரலும் இல்லாமல் உங்களை முன்னேற்றம் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். இந்தத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், உங்களுடைய உற்பத்தித்திறன் அதிகரித்து, பல புதிய மாற்றங்கள் வாழ்வில் ஏற்படுகிறது.
2. செயலில் இறங்குங்கள் (Take Action): கால்பந்து வீரர்கள் ஒவ்வொரு நாளும் கால்பந்து விளையாடுகிறார்கள். எழுத்தாளர்கள் ஒவ்வொரு நாளும் எழுதுகிறார்கள். ப்ரோக்ராமர்கள் தினசரி ஏதேனும் ப்ரோக்ராம் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் தினசரி என்ன செய்கிறீர்கள்? நாம் எதை தினசரி மீண்டும் மீண்டும் செய்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நீங்கள் எந்த அளவுக்கு செயலில் இறங்குகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கான விஷயங்கள் கிடைக்கிறது. எனவே டிகிரி சர்டிபிகேட்டை நம்பி வாழ்க்கையை நகர்த்த முயற்சிக்காமல், தினசரி ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
3. விற்பனை (Sales): நீங்கள் இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் வேலையில், நீங்கள் அணிந்திருக்கும் உடை, வைத்திருக்கும் ஸ்மார்ட்போன், வீட்டில் இருக்கும் டிவி என உங்கள் கண்ணில் படும் அனைத்து பொருட்களும் உங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே விற்பனை செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தத் திறன் இல்லை என்றால், ஒருபோதும் உங்களால் அதிக பணம் சம்பாதிக்க முடியாது.
4. தொடர்புகள் (Contacts): நீங்கள் ஒரு சிறந்த இடத்திற்கு வாழ்க்கையில் செல்ல விரும்புகிறீர்கள் என்றால், தொடர்புகள் மிக மிக முக்கியம். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் நீங்களாக வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும், ஒருவர் உங்களை ரெஃபர் செய்து விண்ணப்பிப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. உங்களை ஒருவர் ரெஃபர் செய்யும்போது நீங்கள் அந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பல மடங்கு அதிகரிக்கிறது. எனவே அதிக பணம் சம்பாதிக்க வாழ்க்கையில் நல்ல தொடர்புகளை முதலில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
5. தொலைநோக்குப் பார்வை (Vision): வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற, நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அந்த இடம் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு இருந்தால் மட்டுமே, அதை நோக்கி பயணிப்பதற்கான பாதை உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள் என்பதே தெரியாமல் இருந்தால் உங்களுக்குள் ஒழுக்கம் இருக்காது. இந்த தொலைநோக்குப் பார்வை மட்டுமே உங்களுக்குள் உறுதியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும்.