உங்கள் Productivity-ஐ அதிகரிக்க 5 டிப்ஸ்!

Productivity Tips.
Productivity Tips.

ஒருவர் பிஸியாக இருப்பதற்கும் செயல்திறனுடன் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகம். ஏதோ ஒரு வேலையை செய்து நேரத்தை கழித்தால் பிசியாக இருக்கிறோம் என சொல்லலாம். ஆனால் நாம் செய்யும் வேலை நமக்கான ஆதாயத்தையும், அறிவையும், முன்னேற்றத்தையும் கொடுத்தால் அதுதான் ப்ரொடக்டிவிட்டி. 

எனவே இந்த பதிவில் உங்களின் Productivity-ஐ அதிகரிக்க உதவும் 5 வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.  

  1. முக்கியத்துவம் வாய்ந்தவற்றிற்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலில் தினசரி நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு முன்னுரிமை அளியுங்கள். அதேபோல ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மல்டிடாஸ்கிங் வேண்டாம். மல்டிடாஸ்டிங் செய்தால் எந்த விஷயத்தையும் உருப்படியாக செய்ய முடியாது. எனவே ஒரு சமயத்தில் ஒரு ஒரு செயலில் மட்டுமே கவனம் செலுத்தினால் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும்.

  2. செய்ய முடிந்த இலக்குகளை அமைக்கவும்: உங்களால் செய்ய முடியாத இலக்குகளை நிர்ணயிப்பது இறுதியில் விரக்தியை ஏற்படுத்தும். எனவே உண்மையிலேயே நீங்கள் நிர்ணயிக்கும் காலத்திற்குள் முடிக்கக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது நல்லது. அது உங்களுக்கு ஒரு வெற்றி உணர்வை ஏற்படுத்தும்.

  3. இடைவேளை எடுங்கள்: தொடர்ச்சியாக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் கொஞ்சம் ஓய்வெடுப்பது உங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். அது உங்கள் மனதிற்கும் ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். எனவே நீங்கள் மீண்டும் ஒரு வேலையை செய்ய திரும்பும்போது, அதிக கவனத்துடன் திறமையாக செயல்பட உதவும். 

  4. நிகழ்காலத்தில் இருங்கள்: இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் நமக்கு எந்த நன்மையும் செய்யப்போவதில்லை. எனவே எல்லா தருணங்களிலும் நிகழ்காலத்திற்கு தேவையான விஷயங்களில் செய்வதில் கவனம் செலுத்துங்கள். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக நிகழ்கால பணிகளில் கவனம் செலுத்துவது உங்களின் ப்ரொடக்டிவிட்டியை அதிகரிக்கும். 

  5. சில வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: எந்த ஒரு செயலிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்த சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகளைப் நீங்கள் பின்பற்றும்போது அதிகப்படியான பணிச்சுமைகளை எளிதாக நிர்வகிக்கலாம். உதாரணத்திற்கு Pomodoro Technique போன்ற வழிமுறைகள் உங்களின் செயல் திறனை மேம்படுத்தும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com