Motivatio Image
Motivatio Imagepixabay.com

சூப்பர் மோட்டிவேஷனுடன் அன்றைய நாளைத் தொடங்க அட்டகாசமான 6 ஐடியாக்கள்!

காலையில் எழுந்ததுமே உற்சாகமான மனநிலை வாய்ப்பது சிலருக்குத்தான் அமைகிறது. சிலர் காலையிலேயே மூட் அவுட் ஆகிவிடுவார்கள். அது நாள் முழுவதும் எதிரொலித்து அன்றைய நாளே வீணாகப் போய்விடும். காலையில் எழும்போது சோம்பேறித் தனமாக அல்லது ஊக்கம் இன்றி இருந்தால் அது மீதி நாளையும் பாதிக்கவே செய்கிறது. அவற்றைத் தவிர்த்து உற்சாகமாக அன்றைய நாளைத் தொடங்க உதவும் ஆறு ஐடியாக்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாசிட்டிவான முதல் நாள் மாலை நேர செயல்பாடுகள்;

முதல் நாள் மாலையை உற்சாகமாக செலவழித்தால் அது அடுத்த நாள் காலையை ஊக்கமுடன் தொடங்க வழிவகுக்கும். குறைந்த அளவு கேட்ஜெட் பயன்பாடு இருக்க வேண்டும். அடுத்த நாளை எப்படி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட வேண்டும். ஒரு டையரி அல்லது நோட்டில் அடுத்த நாள் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி தெளிவான திட்டமிடல்களை எழுத வேண்டும். அதனால் இரவு குழப்பமின்றி நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வரும். அடுத்த நாள் காலையில் உற்சாகமாக எழ வழி வகுக்கும்.

அலாரம் செட் செய்தல்;

காலையில் சீக்கிரம் எழுவதற்கு செல்போனில் அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும். அதை படுக்கையில் வைக்காமல் சற்று தள்ளி எட்ட இருக்கும் நாற்காலியிலோ மேஜையிலோ வைக்க வேண்டும். அப்போதுதான் அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் தூங்க தோன்றாது.

காலை நேர ரொட்டீன்கள்;

ழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலைத் தளர்த்தி நீட்டி, சில ஸ்ரெட்ச்சிங் பயிற்சிகள் செய்து உடலை தளர்த்திக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகள் செய்யும்போது பத்து நிமிட மோட்டிவேஷனல் சம்மந்தமான உரைகளை பாட்காஸ்ட்டில் கேட்டுக் கொண்டே செய்யலாம்.

இலக்கை நிர்ணயித்து அதை கற்பனையில் பார்த்தல்;

ன்றைய நாளுக்கு செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு கொள்ள வேண்டும். எது முதலில் செய்ய வேண்டும் எது பிறகு என்று சரியான ஒரு அட்டவணை இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை அன்று முடிக்க வேண்டி இருந்தால் அதை கற்பனையில் முடித்து விட்டதாக பார்க்க வேண்டும். உதாரணமாக ஒரு பிரபலத்தை நீங்கள் சந்திக்க செல்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களுடன் ஆன சந்திப்பை மனக்கண்ணில் கற்பனையாக ஓட விட்டுப் பார்க்க வேண்டும். அது நிச்சயமாக நடந்து எளிதாக வேலை முடியும்.

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவையும், உடலுக்கு சுகத்தையும் தரும் பெருங்காயம்!
Motivatio Image

சத்தான காலை உணவு;

மச்சீரான காலை உணவு எடுத்துக் கொள்வது அவசியம். புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அது அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்படுவதற்கான ஆற்றலை அளிக்கும். காலையில் வெறுமனே ஜாம் தடவிய இரண்டு பிரட் ஸ்லைஸ்கள், பாலுடன் கார்ன்பிளேக்ஸ், நூடுல்ஸ் என்று உண்ணக்கூடாது. அது உடலுக்கு தேவையான சத்தையும் மனதிற்கு தேவையான உற்சாகத்தையும் அளிக்காது. முட்டை, சுண்டல், இட்லி, உலர் பழங்கள், புதிய பழத்துண்டுகள் போன்றவற்றை உண்ண வேண்டும். 

தியானம் அல்லது பிரார்த்தனை;

குளித்துவிட்டு தியானம் செய்ய விருப்பம் இருந்தால் செய்யலாம். அல்லது ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் சுவாமி படத்தின் முன்  விளக்கேற்றி, அமர்ந்து ஒரு 20 நிமிடங்களாவது மனம் உருக பிரார்த்தனை செய்து ஸ்லோகங்கள் சொல்லி வழிபட்டால் அன்றைய நாளுக்கான ஆற்றல் உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேர கிடைத்துவிடும்.

logo
Kalki Online
kalkionline.com