வாழ்நாள் முழுவதும் பலனளிக்கும் 6 முக்கியமான திறமைகள்!  

Skills
6 Important Skills That Will Last a Lifetime!
Published on

வாழ்க்கையில் வெற்றி அடைய திறமைகள் மிகவும் முக்கியமானவை. புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதால் ஒருவன் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி பெறுகிறான். சில திறன்களை வளர்த்துக்கொள்வது எளிதானது என்றாலும், விடாமுயற்சி அர்ப்பணிப்பு கடின உழைப்பு போன்றவை தேவைப்படும் சில சவாலான திறன்களும் உள்ளன. இந்த கடினமான திறன்களே வாழ்க்கையில் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்தப் பதிவில் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக வெகுமதியைப் பெற்றுத்தரும் 6 திறன்களைப் பற்றி பார்க்கலாம்! 

  1. வேற்றுமொழி கற்றல்: தாய் மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைக் கற்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு நேரம், பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு தேவை. இருப்பினும் இதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பலன் அதிகம் என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதால், அந்த மொழி சார்ந்த அனைத்துமே தெரிந்து கொள்வீர்கள். அதுமட்டுமின்றி, அந்த மொழியைப் பயன்படுத்தி பல இடங்களில் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே ஏதேனும் ஒரு வேற்று மொழியை கற்று தேர்ச்சி பெறுங்கள். அது ஆங்கிலமாக இருந்தால் மிகவும் நல்லது. 

  2. இசைக்கருவி வாசித்தல்: இசைக்கருவியை வாசிக்க கற்றுக் கொண்டு நான் என்ன சினிமாவிலா சேரப் போகிறேன்? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு இசைக் கருவியை வாசிப்பது மிகவும் சிக்கலானது. அவ்வளவு எளிதில் உங்களால் அதை கற்றுக்கொள்ள முடியாது. உங்களது விடாமுயற்சி மற்றும் ஒழுக்கத்தை உங்களுக்கே தெரியப்படுத்த ஏதேனும் ஒரு இசை கருவியை வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். 

  3. Public Speaking: பொது இடங்களில் தைரியமாக பேசும் திறன் என்பது, வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் உங்களுக்கு பெரிதளவில் உதவும். இது உங்களது கருத்துக்களை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் திறனாகும். இந்தத் திறனை கற்றுக் கொள்வது மூலமாக, மேடை பயம், விஷயத்தை தெளிவாக விளக்கும் திறன் போன்றவை வளரும். இந்த திறன் உங்களது தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு நிச்சயம் உதவும். மேலும் பிறரிடம் உங்களை சிறப்பாக பிரதிபலிக்க பப்ளிக் ஸ்பீக்கிங் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். 

  4. Coding: இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் மயமாகிக்கொண்டு வருகிறது. எனவே நீங்கள் கோடிங் திறமையை வளர்த்துக் கொள்வதால், எதிர்காலத்தில் நீங்கள் நல்ல நிலையை அடைய உதவும். ஆரம்பத்தில் இது சவாலானதாக இருந்தாலும், கோடிங் திறமை என்பது உங்களுக்கு பல தொழில்துறை வாய்ப்புகளை பெற்றுத் தரும். குறிப்பாக அதிக ஊதியம் பெறும் வேலைகள், ஃப்ரீலேன்ஸ் வேலைகள் போன்றவை உங்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. 

  5. நேர மேலாண்மை: என்னைப் பொருத்தவரை நேரத்தை சரியாக பயன்படுத்துவதும் ஒரு திறமைதான். அனைவராலும் இதில் கைதேர்ந்தவர்களாக இருக்க முடிவதில்லை. நீங்கள் உங்களது நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால், அது உங்கள் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு கிடைத்துள்ள நேரத்தை திறம்பட நிர்வகித்து, இலக்குகளை நிர்ணயித்து முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். 

  6. வித்தியாசமாக சிந்திக்கும் திறன்: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காணும் அனைத்து விஷயங்களிலும் வித்தியாசமான புதிய சிந்தனை மிகவும் முக்கியம். புதுமையாக சிந்திப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்ல முடியும். நீங்கள் காணும் அனைத்தையும் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், உங்களுடைய மாற்று கோணங்களையும் அதில் உட்பகுத்தி, வித்தியாசமாக சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரலாம். 

இதையும் படியுங்கள்:
World Turtle Day 2024: பூமியின் பண்டைய பாதுகாவலர்கள்! 
Skills

இந்த 6 திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்வது மூலமாக, வாழ்க்கையில் நிச்சயம் நல்ல நிலையை அடைவீர்கள். உங்களது டிகிரி சர்டிஃபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, உங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com