நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவும் 6 ஜப்பானியத் தந்திரங்கள்! 

Japanese tricks
6 Japanese tricks to help you live happily ever after!
Published on

நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது எல்லோருடைய கனவாக இருக்கும் ஒன்றாகும். இன்றைய அவசர உலகில் இது சற்று கடினமானதாகத் தோன்றினாலும், நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து நாம் பலவற்றை கற்றுக் கொள்ளலாம்.‌ அவற்றுள் ஒன்றுதான் ஜப்பானியக் கலாச்சாரம்.‌ நீண்ட ஆயுளுக்குப் பிரபலமான ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் தத்துவங்கள், நம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவும் 6 ஜப்பானியத் தந்திரங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

1. இயற்கையுடன் இணைந்து வாழ்வது: ஜப்பானியர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் பூங்காக்களுக்கு செல்வது, மரங்களின் நிழலில் உட்கார்ந்து தியானம் செய்வது போன்ற செயல்களை தினசரி வாழ்க்கையில் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளனர்.‌ இயற்கையை ரசிப்பது, மன அழுத்தத்தைக் குறைத்து மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலும், இயற்கை சூழலில் நடப்பது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. 

2. மைண்ஃபுல்னெஸ் (Mindfulness): இது தற்போதைய நேரத்தில் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும். ஜப்பானியர்கள் தங்கள் தினசரி செயல்களை செய்யும்போது முழு கவனத்துடன் இருப்பதில் வல்லவர்கள். உணவை மென்று சாப்பிடுவது, குளிப்பது, நடப்பது போன்ற எளிய செயல்களிலும் கூட அவர்கள் மைண்ஃபுல்னெஸ் தத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர். இது மனதை அமைதிப்படுத்தி உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும். 

3. ஒமொடெனஷி (Omotenashi): ஒமொடெனஷி என்பது மற்றவர்களுக்கு உண்மையான அக்கறை காட்டுவது மற்றும் அவர்களுக்கு சேவை செய்வதாகும். ஜப்பானியர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வது நமக்கு மனநிறைவைத் தரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.‌ 

4. வபி-சபி (Wabi-Sabi): வபி-சபி என்பது அழகின் தத்துவம். இது எல்லோரிடமும் அழகைக் காண்பதைக் குறிக்கிறது. இந்தத் தத்துவம் நம்மை நம்முடைய குறைகளை ஏற்றுக் கொள்ளவும் வாழ்க்கையை எளிமையாகப் பார்க்கவும் உதவும்.‌

இதையும் படியுங்கள்:
திருமணத்திற்குப் பின்பு பெண்களின் நட்பு வட்டம் முறிந்துபோவது ஏன் தெரியுமா?
Japanese tricks

5. கியோ (Kyo): கியோ என்பது நட்பு மற்றும் சமூக உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு தத்துவம். நல்ல நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியைத் தரும். 

6. இயற்கை உணவுகள்: ஜப்பானியர்கள் இயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வார்கள். காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவார்கள். இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 

ஜப்பானியர்களின் இந்தத் தத்துவங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் நம் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். மேலே, குறிப்பிட்ட விஷயங்களை நம் வாழ்வில் பின்பற்றுவதன் மூலம் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com