பணக்காரர் ஆக விரும்பும் உங்களுக்கு இந்த 6 மனநிலைகள் உதவும்!

செல்வந்தர் ஆவதற்கான ஆறு முக்கிய மனநிலைகள்!
These 6 Mindsets Will Help You Get Rich!
These 6 Mindsets Will Help You Get Rich!

உலகில் உள்ள அனைவருக்குமே பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அப்படி ஆசை இருக்கும் அனைவருமே பணக்காரன் ஆகிவிடுவதில்லை. சொத்துக்களை சேர்த்து பணம் சார்ந்த விஷயங்களில் வெற்றி அடைவதற்கு அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்புகளைத் தாண்டி மேலும் சில விஷயங்களும் தேவைப்படுகிறது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை நோக்கி உங்கள் செயல்களையும், முடிவுகளையும் செலுத்துவதற்கு, சரியான மனநிலைகளும் அணுகுமுறைகளும் தேவை. இந்தப் பதிவில் பணக்காரர் ஆவதற்கு எதுபோன்ற 6 மனநிலைகள் தேவை எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

இதையும் படியுங்கள்:
Stan Wawrinka: தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் தைரியத்தின் அடையாளம்!
These 6 Mindsets Will Help You Get Rich!
  1. மிகுதி மனநிலை: மிகுதி மனநிலை என்பது உலகில் நாம் பணம் சம்பாதிப்பதற்கு ஏற்ற ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நம்புவதாகும். இது உங்கள் கவனத்தை பல விஷயங்கள் மீது செலுத்த உதவுகிறது. உங்களிடம் இல்லாததைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக இவ்வுலகில் இருக்கும் வளங்கள், யோசனைகள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.

  2. வளர்ச்சி மனநிலை: தொடர் முயற்சி, அர்ப்பணிப்பு, கற்றல் ஆகியவற்றின் மூலமாக உங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு இத்தகைய வளர்ச்சி மனப்பான்மையை நீங்கள் அடைய முடியும். இத்தகைய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது மூலமாக தோல்விகளை எதிர்கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். சவால்களைத் தடைகளாகப் பார்க்காமல் அவற்றை வளர்ச்சி மற்றும் புதுமைக்கான வாய்ப்புகளாகப் பார்க்கவும். இந்த மனநிலை உங்களுக்கு தொடர் வளர்ச்சியைக் கொடுக்கும். 

  3. இலக்கு சார்ந்த மனநிலை: பணக்காரர் ஆவதற்கு தெளிவான அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். இலக்கு சார்ந்த மனநிலை என்பது உங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுவதை உள்ளடக்கியது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடையக்கூடிய இலக்குகளைத் தேர்ந்தெடுப்பது மூலமாக நிச்சயமாக உங்களால் சாதிக்க முடியும். உங்களது தேவைக்கேற்ப இலக்குகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து சரிசெய்து கொள்ளுங்கள். இந்த மனநிலையானது வெற்றிக்கான உங்கள் பாதையில் கவனம் செலுத்தவும், உந்துதல் மற்றும் பொறுப்புடன் இருக்கவும் உதவுகிறது

  4. நீண்ட கால சிந்தனை: நீங்கள் முயற்சிக்கும் எதுவாக இருந்தாலும் உடனடியாக கிடைத்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். செல்வத்தை சேர்ப்பது என்பது ஒரு மாரத்தான், ஸ்பிரிண்ட் ஓட்டம் அல்ல. எனவே நீண்ட கால சிந்தனை மனநிலையை நீங்கள் ஏற்றுக்கொள்வது மூலமாக, எவ்வளவு காலம் ஆனாலும் நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரிய வரும். 

  5. தொழில் முனைவோர் மனநிலை: தொழில் முனைவோர் மனநிலை என்பது நீங்கள் ஒரு தொழிலதிபராக இல்லாவிட்டாலும், ஒரு வணிகத்தின் உரிமையாளரைப் போல சிந்திப்பதைக் குறிக்கிறது. இந்த சிந்தனை உங்களது எதிர்காலத்தை சிறப்பாகக் கட்டமைக்க உதவுகிறது. எல்லா இடங்களிலும் நீங்கள் உங்களை ஒரு தொழிலதிபர் போல நினைத்து செயல்பட்டால், அதற்கான ரிசல்ட் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 

  6. நிதிக் கல்வி மனநிலை: நீங்கள் பெரும் செல்வந்தராக மாற நிதிக் கல்வி மிக முக்கியம். அதாவது பணம் சார்ந்த அறிவை நீங்கள் வளர்த்துக் கொண்டால் மட்டுமே அதை எப்படி சம்பாதிப்பது என்ற யோசனைகள் உங்களுக்கு எழும். எனவே நிதி உலகின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியாக பணம் சார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொண்டே இருங்கள். இணையத்தில் தேடிப் பாருங்கள், புத்தகங்கள் படியுங்கள், தொடர்ச்சியாக உங்களது நிதி அறிவை வளர்த்துக் கொண்டே இருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com