நீங்கள் ஒரு Lone Wolf என்பதற்கான 6 அறிகுறிகள்! 

6 Signs You're a Lone Wolf!
6 Signs You're a Lone Wolf!
Published on

இந்த சமூகம் பெரும்பாலும் சிறந்த நபர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில வரைமுறைகளை வைத்துள்ளது. இதில் தனிமை மற்றும் தனித்துவத்தை விரும்புபவர்கள் சமூகத்தில் பொருந்தாதவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே இத்தகைய குணநலன்களுடன் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்வாக நினைத்துக்கொண்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 

ஆனால் இந்த குணம் நீங்கள் ஒரு Lone Wolf என்பதை நிரூபிப்பதாகும். ஓநாய்கள் எப்படி தனித்து விடப்பட்டாலும் தைரியமாக வாழ்கின்றனவோ, அத்தகைய குணம் கொண்டவர்தான் நீங்கள். இந்த பதிவில் நீங்கள் ஒரு Lone Wolf என்பதற்கான 6 அறிகுறிகள் என்னவெனப் பார்க்கலாம். 

1. சுய பரிசோதனைகள்: உங்களுக்கு தனியாக நேரத்தை செலவிடுவது மிகவும் பிடிக்கும். அத்தகைய நேரத்தில் சுய பிரதிபலிப்பு மற்றும் சுய பரிசோதனைகளை செய்து உங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். பிறர் உங்களைப் புகழ வேண்டும் என்றில்லாமல், உங்களது எண்ணங்கள், செயல்கள் மற்றும் உந்துதல்களைப் பகுப்பாய்வு செய்து, உண்மையான மகிழ்ச்சியை உணர விரும்புவீர்கள்.

2. சுதந்திரம்: உங்களை பிறரிடம் இருந்து தனித்து காட்டுவது எதுவென்றால், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுதான். முடிவுகளை எடுப்பதில் இருந்து, உங்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் விஷயங்களை செய்வது முதல், எல்லாவற்றிலும் யாருடைய பங்களிப்பும் இன்றி நீங்களாகவே செயல்பட வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்குள் இருக்கும். குறிப்பாக உங்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டும் என்ற மனப்பான்மை அதிகம் இருக்கும்.

3. தனிமையில் இனிமை: பிறரைப் போல தனிமையை நினைத்து வருந்தாமல், உங்களுடைய தனிமையை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக நீங்கள் பயன்படுத்துவீர்கள். எழுதுவது ஓவியம் வரைவது அல்லது புத்தகம் படிப்பது எதுவாக இருந்தாலும், தனிமையை தனித்துவமான ஒன்றாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் இருக்கும். 

4. சாதாரண பேச்சுக்கள் உங்களுக்கு பிடிக்காது: மேலோட்டமான தேவையில்லாத உரையாடல்கள் மற்றும் சிறிய பேச்சுகளில் உங்களுக்கு ஈடுபாடு சுத்தமாக இருக்காது. பிற நபர்களைப் பற்றி அதிகமாக எதையும் பேச விரும்ப மாட்டீர்கள். அர்த்தமுள்ள உரையாடல்களில் மட்டுமே உங்கள் ஆர்வம் அதிகமாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
Spider-Tailed Horned Viper: எப்போதும் ஒன்றாகவே இருக்கும் சிலந்தியும் பாம்பும்! 
6 Signs You're a Lone Wolf!

5. உள்ளுணர்வை நம்புவீர்கள்: உங்களுடைய வாழ்க்கை முடிவுகளுக்கு பெரும்பாலும் உள்ளுணர்வை அதிகம் நம்பி முடிவெடுப்பீர்கள். பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதை முழுமையாக நம்பாமல், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அதிகம் நம்பும் நபராக இருப்பீர்கள். இத்தகைய அணுகுமுறை பெரும்பாலும் உங்களை வழக்கத்திற்கு மாறான விஷயங்களுக்கு கொண்டு சென்றாலும், மற்றவர்கள் தராத புதிய அனுபவங்களும் வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்க வழிவகுக்கும். 

6. சமூகத்திற்கு இணங்க மாட்டீர்கள்: இந்த சமூகம் தனக்கென வரையறுத்துக் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு இணங்காமல், உங்கள் விருப்பம் போல வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். உங்களது நம்பிக்கையை மற்றவர்களுக்காக சமரசம் செய்யாமல் உங்களுக்கு உண்மையாக இருப்பது மிகவும் பிடிக்கும். உங்களைப் போலவே ஒத்த எண்ணம் கொண்ட நபர்களை நீங்கள் அதிகம் நம்புவீர்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com