Toxic மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்ள 6 சிறந்த வழிகள்!

6 Best Ways to Identify Toxic People.
6 Best Ways to Identify Toxic People.
Published on

மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறு மாதிரி பேசுபவர்களை டாக்ஸிக் என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை நம்மால் எப்படி தெரிந்துக்கொள்ள முடியும்? உண்மைத்தான் என்ன உள்ளது என்று துள்ளியமாக கண்டுப்பிடிக்க முடியாது. ஆனால் நல்லது நினைக்கிறார்களா? அல்லது கெட்டது நினைக்கிறார்களா?என்பதை கண்டுப்பிடிக்கலாம். அந்தவகையில் டாக்ஸிக் மனிதர்களை கண்டுப்பிடிப்பதற்கான 6 வழிகளைப் பற்றி பார்ப்போம்.

1. உற்சாகமாக இருக்கும்போது எதிர்மறை வார்த்தைகளைக் கூறுபவர்கள்: நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி அடைந்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், காரணமே இல்லாமல் உங்களின் உற்சாகத்தை இழக்கும்படியான சில வார்த்தைகளைக் கூறுவார்கள். குறிப்பாக உங்களின் பலவீனங்களை சுட்டிக்காட்டி உற்சாகமிழக்கச் செய்வார்கள்.

2.  குறை கூறுபவர்கள்: நீங்கள் ஒரு விஷயத்தை சரியாக செய்தால்கூட குறை கூறுவார்கள். அதுவும் குறை கூறும்போது மோசமான வார்த்தைகளையே பயன்படுத்தினால் இவர்கள் டாக்ஸிக் என்பதை நீங்கள் எளிதாக கண்டுப்பிடித்துவிடலாம். ஆனால் நீங்கள் செய்த தவறுகளை சுட்டிக் காண்பிப்பவர்களை குறை கூறுபவர் என்று சொல்லிவிடமுடியாது.

3.  சுயநலவாதிகள்: மற்றவர்களைப் பாதிக்காத சுயநலம் என்றும் நல்லதுதான். ஆனால் ஒருவர் தன் சுயநலத்திற்காக மற்றவர்களை வேண்டுமென்றே கீழே தள்ளிவிடுவது டாக்ஸிக் என்றே கருதப்படும். எவரொருவர் அவர்களுடைய கனவுகளுக்காக உங்களுக்கு தீய யோசனைகளை கூறுகிறார்களோ அவர்களை எப்போதும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

4.  விமர்சகர்கள்: நீங்கள் செய்யும் எந்த விஷயங்களுக்கும் துணை புரியாமல், அனைத்து முயற்சிகளுக்கும் எதிர்மறை விமர்சனங்களைக் கூறிக்கொண்டு இருந்தால், அவர்களை விட்டு நீங்கள் விலகியே ஆக வேண்டும். ஏனெனில் நீங்கள் என்ன செய்தாலும் அவரின் பதில் 'உன்னால் முடியாது விட்டுவிடு' என்பதாகத்தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நாம் பேசப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் நியூரான்கள்.. அடேங்கப்பா! 
6 Best Ways to Identify Toxic People.

5. உங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள துடிப்பவர்கள்: உங்களுடைய ஆசைகள், முடிவுகள் என அனைத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். உங்களை சுதந்திரமாக எந்த விஷயத்தையும் செய்ய விடமாட்டார்கள். ஏன்? பேசக் கூட விடமாட்டார்கள். இப்படி உங்களது சுதந்திரத்தைப் பறிக்கும் ஒவ்வொருவரும் டாக்ஸிக் தான்.

6. அன்பை காரணம் காட்டி உங்களைக் கட்டுப்படுத்துபவர்கள்: பயம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி சுதந்திரத்தைப் பறிப்பது ஒரு வழி. அதேபோல் அன்பை பயன்படுத்தி உங்கள் சுதந்திரத்தைப் பறிப்பது இன்னொரு வழி. இரண்டிலும் சுதந்திரத்தை பறிப்பது மட்டுமே பொதுவானது. இப்படி உங்கள் மீது அன்பு செலுத்துவது போல அடக்க முயல்பவர்களும் டாக்ஸிக் மனநிலையைக் கொண்டவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com