உங்கள் மூளையை Restart செய்யும் 6 வழிகள்.

6 Ways to Restart Your Brain.
6 Ways to Restart Your Brain.

இயந்திரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் எப்படி பழுதாகிறதோ, அப்படிதான் நாமும் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருந்தால் நமது மூளை அதன் செயல்பாட்டை குறைத்துக்கொள்ளும். அதுபோன்ற தருணங்களில் சில வழிமுறைகளை பின்பற்றி நாம் அதை ரீஸ்டார்ட் செய்வது அவசியம். இந்த பதிவில் முடங்கிக் கிடக்கும் மூளையை ரீஸ்டார்ட் செய்வதற்கான 6 வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

  1. அதிகப்படியான Goals வேண்டாம்: சிலர் தங்களால் அனைத்துமே செய்து சாதிக்க முடியும் என நினைத்துக் கொண்டு, பல குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு மிகப்பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வார்கள். அவர்கள் நிர்ணயம் செய்யும் பல குறிக்கோள்களில் ஒன்றைக் கூட உருப்படியாக செய்ய முடியாது. எனவே உங்களால் உறுதியாக செய்ய முடியும் என்ற விஷயங்களில் மட்டும் உங்களுடைய குறிக்கோளை வைத்து முன்னேறுங்கள். ஒரே நேரத்தில் அதிகப்படியாக நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் கோல்ஸ், உங்களுக்கு சுமையாக மாறலாம். 

  2. Multitasking வேண்டாம்: நமது மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்படவில்லை. அதனால் ஒரு சமயத்தில் ஒரு வேலையில் முழு கவனத்துடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். மல்டிடாஸ்கிங் சில சமயங்களில் தவறுகள், மன அழுத்தம், குறைந்த ப்ரொடக்டிவிட்டி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக ஒரு சமயத்தில் ஒரு வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

  3. Rest அவசியம்: மனிதர்கள் ஒன்றும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி செயல்படும் இயந்திரம் கிடையாது. நாம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட ஓய்வு என்பது தேவை. நீங்கள் எந்த அளவுக்கு ரெஸ்ட் எடுத்து மூளைக்கு ஆற்றலைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களால் முன்பை விட சிறப்பாக செயல்பட முடியும்.

  4. சீக்கிரம் தூங்குங்கள்: இப்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அனைவருமே கையில் ஒரு ஸ்மார்ட்போன் வைத்துக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் இருக்கிறார்கள். இது உங்களின் மூளையை வெகுவாக பாதிக்கும். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்பதை விட, அந்த ஏழு மணி நேரம் சரியான நேரத்தில் தூங்குகிறோமா என்பது அவசியம். எனவே உங்களுடைய மூளை சிறப்பாக செயல்பட விரைவாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

  5. நெகட்டிவ் விஷயங்கள் வேண்டாம்: உங்கள் மூளை முடங்கிக் கிடக்கிறது என்றால், அதற்கு நீங்கள் தொடர்ச்சியாக நெகட்டிவ் விஷயங்களை கொடுக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் மூளைக்குள் எதுவெல்லாம் நெகட்டிவ் விஷயங்களைத் திணிக்கிறதோ அதை அனைத்தையும் ஒதுக்குங்கள். தவறான சோசியல் மீடியா போஸ்ட், தவறான நண்பர்கள் போன்றவற்றையும் ஒதுக்குங்கள். நீங்கள் நேர்மையாக சிந்தித்தாலே மூளை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

  6. உடற்பயிற்சி செய்யுங்கள்: மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க அல்லது முடங்கிய மூளை ரீஸ்டார்ட் ஆக உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். நீங்கள் உங்களை சிறப்பாக மாற்ற வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தால், முதலில் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். உடற்பயிற்சிக்கு உங்களுடைய கவலை, சோகங்களையும் மறையச் செய்யும் ஆற்றல் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com