மகிழ்ச்சியை விரும்பாதவர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அதைத் தேடித்தான் பலரது வாழ்க்கையே கழிகிறது. புத்த துறவிகள் மகிழ்ச்சிக்கும் மன அமைதிக்கும் பின்பற்றும் 7 பழக்க வழக்கங்களை பார்ப்போமா?
1.தியானம் மற்றும் நினைவு படுத்துதல்:
நினைவாற்றல் மற்றும் தியானம் ஆகியவை பயிற்சிகள், மனதிற்கு ஆழ்ந்த அமைதி மற்றும் மகிழ்ச்சியை அடைய உதவும். புத்த துறவிகள், இதனை அன்றாட நாட்களில் செய்வதால் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்று கூறுகின்றனர். இந்தப் பயிற்சியானது மன அழுத்தத்தைக் குறைத்து மன உறுதியை அதிகரிக்கும். இதனால், மனதிற்கும் உடலுக்கும் அமைதியும், உறுதியும் கிடைக்கும்.
2.சிம்பிளான வாழ்க்கை:
ஒரு சில செல்வந்தர்களை பார்த்தால், அவர்களிடம் அதிக செல்வாக்கு இருப்பதற்கான பந்தாவே இருக்காது. சிம்பிளான வாழ்க்கையை வாழ்வதும் மனதிற்கு அமைதியை கொடுக்குமாம். நமது மகிழ்ச்சி ஒரு பொருள் அல்லது நபர் மீது அல்லாமல் நமக்குள்ளாக இருக்க வேண்டும். அப்போதுதான், எது நம் வாழ்வில் இருந்தாலும் இல்லையென்றாலும் நமக்கு மன மகிழ்ச்சி நிலைக்கும்.
3.இரக்கம்:
பிறரை புரிந்து கொள்ளும் திறனும், பலருக்கு குறைவாக இருக்கிறது. பிறரிடம் பேசுவது, பிறரது குறைகளை கேட்பது, பிறரது எண்ணங்களை உணர்து கொள்வது, ஆகியவை உங்களுக்கு வாழ்க்கை குறித்த புரிதலை உண்டாக்கும். பிறரிடம் இரக்கம் காட்டுவதும் நல்ல மன நிம்மதியை கொடுக்குமாம்.
4.மனம் ஒட்டாத பயிற்சி:
நாம், எந்த பொருட்கள் அல்லது நபர்கள் மீதும் பெரிதாக நமது மகிழ்ச்சி சார்ந்ததாக இருக்க கூடாது. அப்படி ஒரு பொருள் சார்ந்தோ அல்லது நபர் சார்ந்தோ இருந்தால் அவர்கள் அல்லது அந்த பொருள் எதிரே இல்லை என்றால் அந்த மகிழ்ச்சி இருக்காது. எனவே, உங்களை சுற்றி இருக்கும் பொருட்களிடமும் நபர்களிடமும் ஒட்டுதல் இல்லாமல் இருந்து பழகலாம்.
5.நன்றியுணர்வு:
வாழ்வில் இதுவரை கிடைத்தவிஷயங்களுக்கு, இனி கிடைக்க போகும் விஷயங்களுக்கு என அனைத்திற்கும் சேர்த்து நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். இதை தினமும் செய்து ஒரு பழக்கமாக மாற்றினால், வாழ்வில் அனைத்து விஷயங்களும் மாறலாம். இதனால் நமது மனநிலையும் மாறி, மன நிறைவும் இருக்கும்.
6.இயற்கையுடன் இணைதல்:
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது, நமது மனநிலையை மேம்படுத்த உதவும். அது மட்டுமன்றி, நம் மனதை மற்றும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும். பூங்காவில் உட்காருவது, மழையில் நனைவது, வெறும் காலில் புல் தரையில் நடப்பது, அருவியில் குளிப்பது போன்ற நடவடிக்கைகள் உங்களை ஹீல் செய்ய உதவும்.
7.சுய கட்டுப்பாடு:
தினமும் உடற்பயிற்சி செய்வதில் இருந்து, சரியான உணவுகளை உட்கொள்வது வரை நமது சுய ஒழுக்கம் மன நிம்மதியை கொடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது நம் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு நம்மை ஒரு தனிமனிதராகவும் மேம்படுத்துகிறது.
புத்த துறவிகள் கடைப்பிடிக்கும் இந்த 7 பழக்க வழக்கங்களை நாமும் பின்பற்றினால் வாழ்வில் மகிழ்ச்சி மன அமைதி பெருக்கெடுத்து ஓடும்.