கண்டிப்பாக “நோ” சொல்ல வேண்டிய 7 தருணங்கள்!

Motivation image
Motivation imagepixabay.com
Published on

ம்முடைய வாழ்க்கையில் நிறைய சமயங்களில் இந்த விஷயத்தை நாம் அன்று மாற்றி செய்திருந்தால், இன்று வேறுவிதமான மாற்றங்கள்  நம் வாழ்வில் நிகழ்ந்திருக்குமே என்று யோசித்த தருணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட வருத்தப்பட கூடிய தருணங்களை  நம் வாழ்வில் நிகழாமல் இருக்க கண்டிப்பாக “நோ” சொல்ல வேண்டிய 7 தருணங்களை பற்றி பார்க்கலாம்.

ப்போதுமே பதற்றத்தில் இருக்கும்போது முடிவெடுக்க கூடாது. அப்படி அவசரமாக நாம் எடுக்கும் முடிவு நமக்கு நன்மை விளைவிக்காது. எனவே யோசித்து நிதானமாக ஒரு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். கோபமாகவோ, பதற்றமாக இருக்கும்போது எடுக்கும் முடிவிற்கு எப்போதும் நோ சொல்லுங்கள்.

டன் அல்லது  சூரிட்டி என்று யார் கேட்டாலும் நோ சொல்லி விடவும். நன்றாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கடன் வாங்குவதாலோ அல்லது கொடுப்பதாலோதான் பிரச்சனைகள் வருகிறது. கடன் அன்பை முறிக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. எனவே யாராக இருந்தாலுமே கடனுக்கு நோ சொல்லுங்கள்.

சிலர் கேட்டு விட்டார்கள் என்று நமக்கு பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை வாழ்வில் வரும். அந்த சமயத்தில் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் நோ சொல்வதில் ஒரு தயக்கமும் கூச்சமிருக்கலாம். சிலர் நாம் எது கேட்டாலும் நோ சொல்ல மாட்டோம் என்று தெரிந்து கொண்டே உதவி கேட்பார்கள். எப்போதுமே நம்முடைய பலவீனத்தை அடுத்தவர்கள் ஆதாயமாக எடுத்து கொள்ள முயற்சிக்கும் இடங்களில் கண்டிப்பாக நோ சொல்ல வேண்டும்.

ணவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்போது கண்டிப்பாக அதிக உணவை எடுத்து கொள்வதில் நோ சொல்ல வேண்டும். யார் நம்மை வற்புறுத்தினாலும், அந்த கட்டுப்பாட்டை நமக்கே நாம் விதித்து கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

வாழ்க்கையில் தொழில் சார்ந்து முன்னேறி கொண்டிருக்கும் வேளையில் வரும் தேவையற்ற கவன சிதறல்களுக்கு கண்டிப்பாக நோ சொல்ல வேண்டும். இல்லையேல் நாம் வெற்றியடைவதில் தாமதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மார்வலின் அடுத்த காமிக் புத்தகமான ‘Ultimate spider man’ வெளியானது.. ரசிகர்கள் உற்சாகம்!
Motivation image

சில இடங்களில் சமூக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற கண்ணியம் காரணமாக தேவையற்ற பழக்கங்களை வளர்த்து கொள்வதற்கு நோ சொல்ல வேண்டும். அப்படியில்லையேல் பின்பு அதற்கே நாம் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

மக்கு பிடிக்காத விஷயத்தை செய்யச் சொல்லி யார் நம்மை வற்புறுத்தினாலும் கண்டிப்பாக நோ சொல்ல வேண்டும். நம்முடைய நன்மையை கருதிதான் கூறுவதாக சொல்லி நம்முடைய உறவினர்களோ, நெருங்கியவர்களோ நம்மை வற்புறுத்தி ஒரு காரியத்தை செய்ய சொல்லும்போது கண்டிப்பாக அங்கே நோ சொல்வதில் தவறில்லை. நாம் செய்யும் செயலுக்கு முழு பொறுப்பு நாமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com