நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் 7 தடைகள்!

Motivation Image
Motivation Imagepixabay.com

அச்சம்  (Fear)

ந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து துணிந்து இறங்காமல், இதனை நம்மால் செய்ய முடியுமா  என பயப்படுவது முதல் தடைக்கல்!


வெட்கம்  (Shyness)

ந்த ஒரு செயலையும் ‘இதை நம்மால் செய்ய இயலுமா, அதற்கான  தகுதி நம்மிடம் உள்ளதா? ஒருவேளை நாம் தோற்றுவிட்டால் மற்றவர்களின் கேலிக்குள்ளாகி விடுவோமே’ என சுயநம்பிக்கையற்று  வெட்கப்படுவதும் முன்னேற்றத்தின் தடைக்கல்லே!

சோம்பல்  (Laziness)

சோம்பல் காரணமாக எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பதும் தடைக்கல்லே!


காலம் தாழ்த்துதல் (Procrastination)

காலாகாலத்தில் செய்ய வேண்டிய செயலை நாளை, நாளை என தள்ளிப் போட்டுக்கொண்டே செல்லுதல் மிகவும் அபாயகரமான ஒரு தடைக்கல்!

தாழ்வுமனப்பான்மை (Inferiority Complex)

தாழ்வு மனப்பான்மை காரணமாக எந்தச் செயலிலும் ஈடுபடுவதற்கான தைரியமும் தகுதியும் தமக்கு இல்லை என தம்மைத் தாமே தாழ்த்திகொள்வதும் ஒரு தடைக்கல்தான்!


பிற்போக்கு பழக்கங்கள் (Negative Habits)

ம்மால் மாற்றிக்கொள்ள இயலாத பிற்போக்கான எண்ணங்கள் மற்றும் செயல்கள் ஆகியவற்றால் தொடரும் பிற்போக்கான பழக்க வழக்கங்களும் ஒரு மாபெரும் தடைக்கல்தான்!

இதையும் படியுங்கள்:
பொட்டாசியம் சத்தின் தேவையும் பயன்களும்!
Motivation Image

எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts)

மக்குள் தோன்றும் எதிர்மறை எண்ணங்களே தமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும் அதை நீக்கும் வழி தெரியாமல் திண்டாடுவதும் ஒரு பெரிய தடைக்கல்லே!


மேற்கூறியவற்றைத் தகர்த்தெறிந்து நின்றாலே போதும், முன்னேற்றப் பாதையில் சென்று நாம் நினைத்ததை எளிதில் அடைய முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com