Sings Of INFJ: நீங்கள் ஒரு INFJ என்பதற்கான 7 அறிகுறிகள்! 

INFJ Male
7 Signs You're a True INFJ.

Myers-Briggs Type Indicator (MBTI) என்பது ஒருவரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியாகும். இது ஒரு தனிநபரின் விருப்பங்கள், பண்புகள், செயல்பாடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆளுமை வகைகளாக வகைப்படுத்துகிறது. MBTI ஆல் வகைப்படுத்தப்பட்ட 16 ஆளுமைப் பண்புகளில் INFJ-வும் ஒன்று. இது Introvert Intuitive Feeling மற்றும் Judging போன்றவற்றைக் குறிக்கிறது. இத்தகைய குணம் கொண்டவர்கள் பொதுவாகவே ‘வழக்கறிஞர்கள்’ அல்லது ‘ஆலோசகர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இந்த பதிவில் INFJ பண்பைக் கொண்டவர்களின் 7 அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். 

  1. ஆழ்ந்த புரிதல்: INFJ பண்புடையவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். பிறரது உணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். இதனால் அவர்களால் பிறருக்கு எதுபோன்ற ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். 

  2. உள்ளுணர்வு: உள்ளுணர்வை அதிகம் நம்பும் INFJ குணம் கொண்டவர்கள், அவர்களின் முடிவுகளை உள்ளுணர்வின் அடிப்படையிலேயே எடுக்கின்றனர். எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறன் இவர்களுக்குள் இருக்கும். எனவே எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து கொள்வதற்கான மாறுபட்ட சிந்தனை இவர்களுக்குள் அதிகம் இருக்கும். 

  3. லட்சியம்: உண்மையான INFJ-க்கள் அவர்களின் லட்சியத்தால் அதிகம் இயக்கப்படுகின்றனர். அவர்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி, வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த பெரிதும் முயல்வார்கள். 

  4. மற்றவர்களுடன் ஆழமான தொடர்பு: பிறருடன் பழகும்போது உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். தங்களின் தேவைக்காக யாருடனும் பழக மாட்டார்கள். உறவின் நன்மைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அன்பு மற்றும் பாசம் போன்ற விஷயங்களுக்கு ஏங்கும் இவர்கள், சமூகத்தில் பெரிய கூட்டத்துடன் பழகுவதைவிட, ஒரு சில உண்மையான நண்பர்களுடன் இருந்தாலே போதும் என்பதை அதிகம் விரும்புவார்கள். 

  5. கிரியேட்டிவிட்டி: INFJ-க்கள் அதிகம் கிரியேட்டிவிட்டி கொண்டவர்கள். அவர்களுக்குள் இயல்பாகவே திறமை ஒளிந்திருக்கும். பெரும்பாலும் எழுத்து, கலை, இசை அல்லது மற்ற பிற கிரியேட்டிவ் விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். இந்த ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதால், அவர்களது எண்ணம் எப்போதும் வித்தியாசமாக சிந்திப்பதையே அதிகம் விரும்பும். 

  6. நம்பகத்தன்மையுடையவர்கள்: பிறரையும், தங்களையும் அதிகமாக நம்பக் கூடியவர்கள் இவர்கள். எதைப்பற்றியும் தேவையில்லாமல் சந்தேகிக்க மாட்டார்கள். பிறருக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை அதிகம் விரும்புகிறார்கள். இவர்களது வாழ்வில் பெரும்பாலும் சுய பரிசோதனை, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுகின்றனர். இது அவர்களை நம்பிக்கைக்குரியவர்களாக மாற்றுகிறது. 

  7. வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுபவர்கள்: சராசரி மனிதனைப் போல, வாழ்க்கையை ஏதோ ஒரு மாதிரி வாழ்ந்துவிட்டுப் போவோம் என்றில்லாமல், தங்களின் பிறப்புக்கான அர்த்தத்தை தேடுபவர்களே INFJ. இந்த உலகில் அவர்களுடைய தனித்துவமான பங்கை கண்டுபிடித்து, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த அதிகம் விரும்புவார்கள். எனவே ஆலோசனை, கற்பித்தல் மற்றும் பிறருக்கு உதவி செய்தல் போன்ற செயல்பாடுகளில் இவர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். 

இதையும் படியுங்கள்:
வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசிக்குதா? இது எதன் அறிகுறி தெரியுமா? 
INFJ Male

இந்த 7 அறிகுறிகளும் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஒரு INFJ. முற்றிலும் வித்தியாசமான பண்புகளைக் நீங்கள் கொண்டிருப்பதால், அதைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற முயலவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com