சாதிப்பதற்கு வேண்டிய 7 திறமைகள்!

Motivation Image
Motivation Image

ரு மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய திறமைகள் என்னவென்று இந்த பதிவு மூலமாக அறிந்து கொள்ளலாம்.

1.   பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஆங்கிலத்தையேனும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலம் அறிந்திருந்தால், நாம் உலகில் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம். நமது எண்ணங்களை பலதரப்பட்ட மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய எண்ணங்களை நாம் புரிந்து கொள்ளவும், மொழி என்பது இன்றியமையாதது.

2.   கணினி சார் விஷயங்களை அனைவரும் அறிந்திருத்தல் வேண்டும். “நான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர், இவற்றை நான் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?” என்று ஏளனமாக நினைக்காதீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு ஒரு கணினி கண்டிப்பாக இருக்கும். எனவே அதைப் பற்றி அறிந்து கொள்வது உங்களுக்கு நிச்சயமாக கைகொடுக்கும். ஏதேனும் கணினி மொழி ஒன்றை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்.

3.   பொதுவெளியில் பேசும் திறன்- நாம் அனைவருமே நம் நண்பர்களுடன், நம் குடும்பத்தாருடன் நன்றாக பேசுவோம். ஆனால் பொதுவெளியி நமக்குத் தெரியாத நான்கு பேர் முன்னாடி பேச சொன்னால், நாக்கு நாட்டியமாடும். எனவே பொதுவெளியில் தைரியமாக பேசும் திறன் உங்களுக்கு ஒரு மன உறுதியை ஏற்படுத்தும்.

4.   கூட்டத்தை கட்டுப்படுத்தும் திறன்- கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் ஒரு கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். ஒருவரிடமிருந்து வேலை வாங்க வேண்டும் என்றால், அவர்களுக்கு எம்மாதிரியான கட்டளைகள் இடலாம் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். 

5.   மனிதர்களோடு பழகும் திறன்- பொதுவாகவே வெகுசிலர், தன் குடும்பத்தை தாண்டி மற்ற மனிதர்களோடு சரிவர உரையாட மாட்டார்கள். ஆனால் முன்பின் தெரியாத மூன்றாம் நபரோடு நாம் பேசும்போது தான், நம்முடைய பிறரோடு கலந்துரையாடும் திறன் மேம்படுகிறது. இதன் மூலம் நாம் எங்கு சென்றாலும் பிற மனிதர்களை தைரியமாக அணுக முடியும்.

6.   விற்பனைத் திறன்- இந்த திறன் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. ஒரு பொருளை ஒருவரிடம் லாவகமாக பேசி விற்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாம் பொருளை மட்டும் தான் விற்க வேண்டுமா என்று கேட்டால், ஒரு சில சமயம் நம்மையே விற்க வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றால் உங்களை அவர்கள் தேர்வு செய்ய, உங்களின் மேலோங்கிய பண்புகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் உங்களை வாங்கச் செய்ய வேண்டும். எனவே ஒரு பொருளின் சிறப்பம்சத்தை எப்படி விவரித்தால் ஒருவர் வாங்குவார் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பாத யாத்திரை செல்பவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்!
Motivation Image

7.   சமூகவலைத்தள மார்க்கெட்டிங்- பொதுவாகவே இதைப்பற்றி மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் என்பது பல மடங்கு பெறுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போதிலிருந்தே அதனைப்பற்றி சிறுக சிறுக கற்றுக்கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் உங்களை சிறப்பானவர்களாக மாற்றக்கூடும்.

நான் மேற்கூறிய திறமைகள் அனைத்தையும் நீங்கள் கற்றுக் கொண்டால் நிச்சயமாக ஏதோ ஒரு சூழலில் அது உங்களுக்கு பயன்படும். தற்போதுள்ள போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில், திறமைகளுக்கே மதிப்பளிக் கப்படும். எனவே அதனை நன்கு உணர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள தற்போதே முற்படுங்கள். கற்றல் நிச்சயமாக ஒருநாள் உங்களுக்கு பயனளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com