தியானம் பண்ணுங்க, படிப்புல சூப்பரா இருங்க!

Meditation
Meditation
Published on

படிக்க உட்கார்ந்தா கவனம் சிதறுதா? படிச்சது ஞாபகம் வர மாட்டேங்குதா? எக்ஸாம் டைம்ல டென்ஷனா இருக்கா? கவலைப்படாதீங்க, இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு சூப்பரான தீர்வு இருக்கு. அதுதான் தியானம் (Meditation). வெறும் அமைதியா உட்காருறது மட்டும் இல்ல தியானம். இது நம்ம மனசை கூர்மைப்படுத்தி, படிப்புல இன்னும் சிறப்பா செயல்பட உதவும். அது எப்படினு பார்க்கலாம் வாங்க.

1. கவனத்தை அதிகப்படுத்தும்: தியானம் பழகும்போது, நம்ம கவனம் ஒரு விஷயத்துல நிலைக்கும். இது படிக்கும்போது ரொம்பவே உதவும். மனசு அலைபாயாம, புக்கில இருக்கிற விஷயத்துல முழுசா கவனம் செலுத்த முடியும். இதனால படிச்சது நல்லா பதியும்.

2. ஞாபக சக்தியை கூர்மையாக்கும்: தியானம் நம்ம மூளையோட ஹிப்போகேம்பஸ் (Hippocampus) பகுதிய பலப்படுத்தும்னு ஆய்வுகள் சொல்லுது. இந்த பகுதிதான் ஞாபக சக்திக்கு ரொம்ப முக்கியம். தியானம் செய்யும்போது, புது விஷயங்களை கத்துக்கவும், படிச்சதை ஞாபகம் வச்சுக்கவும் நம்ம மூளைக்கு பயிற்சி கிடைக்குது.

3. மன அழுத்தத்தைக் குறைக்கும்: படிப்பு, எக்ஸாம் டைம்ல மன அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்கும். தியானம் இந்த மன அழுத்தத்தை குறைச்சு, மனசை அமைதிப்படுத்தும். மனசு அமைதியா இருந்தா, படிப்புல கவனம் தானா வரும்.

4. தூக்கத்தை மேம்படுத்தும்: நல்ல தூக்கம் படிப்புக்கு ரொம்ப அவசியம். தியானம் தூக்கமின்மை பிரச்சனையை சரி பண்ணி, ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும். நல்லா தூங்குனா, மூளைக்கு நல்ல ஓய்வு கிடைக்கும், படிச்சது நல்லா பதியும்.

5. முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்: தியானம் மனசை தெளிவுபடுத்தும். இதனால, ஒரு பிரச்சனை வரும்போது அதை புரிஞ்சுக்கிட்டு, சரியான முடிவை எடுக்க முடியும். படிப்புலயும், வாழ்க்கைலயும் இது ரொம்ப முக்கியம்.

6. புதுசா கத்துக்குற திறனை அதிகரிக்கும்: தியானம் மூளையோட செயல்பாட்டை மேம்படுத்தும். இது புதுசா விஷயங்களை கத்துக்கற திறனை அதிகரிக்கும். கடினமான பாடங்களை கூட எளிதா புரிஞ்சுக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ஒரு காரணமும் இல்ல... ஆனா மனசு ஒரே பதட்டமா இருக்கா? ஏன் தெரியுமா?
Meditation

7. படைப்பாற்றலை தூண்டும்: மனசு அமைதியா இருக்கும்போது, புது புது ஐடியாக்கள் தோணும். தியானம் இந்த படைப்பாற்றலை தூண்டி, பாடங்களை புது வழிகள்ல புரிஞ்சுக்க உதவும். ப்ராஜெக்ட்ஸ், கட்டுரை எழுதுறதுக்கெல்லாம் இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.

தியானம் செய்ய தினமும் ஒரு 10-15 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து, உங்க மூச்சைக் கவனிக்கிறதுல இருந்து ஆரம்பிக்கலாம். தொடர்ந்து பயிற்சி செஞ்சா, உங்க படிப்புல ஒரு பெரிய மாற்றத்தை நீங்களே பார்க்கலாம். இதனால படிப்பு மட்டும் இல்ல, உங்க வாழ்க்கையே இன்னும் சிறப்பா அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com