வாழ்க்கையை புரிய வைக்கும் 8 உண்மைகள்!

8 Truths That Make Life Understandable.
8 Truths That Make Life Understandable.

வாழ்க்கையில் சில உண்மைகளை நாம் விரைவாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே, அதை சிறப்பாக கட்டமைக்கும் அடுத்த அடியை நாம் எடுத்து வைக்க முடியும். எனவே இந்த பதிவில் வாழ்க்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் 8 உண்மைகள் என்னவென்று நாம் தெரிந்து கொள்வோம்.

  1. உங்களுடைய துணையானது, உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், கனவுகளுக்கும் துணை நிற்பவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், எந்தத் துணையும் இல்லாமல் தனிமரமாய் இருப்பதே நல்லது. யாரும் யாருக்காகவும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

  2. இருவர் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நினைப்பது தவறு. இங்கே பெரும்பாலானவர்கள் சமூகத்திற்கும், தனிமைக்கும் பயந்தே சேர்ந்து வாழ்கிறார்கள்.

  3. வாழ்க்கை எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது பெரும்பாலும் துன்பத்திற்கே வழிவகுக்கும். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கஷ்டத்தை நாம் அனுபவிக்கத்தான் செய்கிறோம். எனவே அதை ஏற்றுக்கொண்டு அதன் வழியே மகிழ்ச்சியாய் பயணிக்க முயலுங்கள்.

  4. பணம்தான் உலகை ஆள்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பணம் உண்மையான மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றாலும், வாழ்க்கையில் சிலவற்றை எளிதாக அடைய வழிபுரிகிறது. எனவே ஏன் உலகம் இப்படி இருக்கிறது? என்று கோபப்படாமல், பணத்தை சம்பாதிக்கும் திறன்களையும் வழிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

  5. ஒரு செயலை செய்வதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. நீங்கள் செய்யத் தொடங்கும் எந்த நேரமும் நல்ல நேரம்தான்.

  6. அனைத்திற்கும் பயந்துகொண்டு எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாய் இருப்பதற்கு, தைரியமாய் எடுக்கும் தவறான முடிவு எவ்வளவோ பரவாயில்லை.

  7. நீங்கள் எப்போது கடினமான விஷயங்களை செய்கிறீர்களோ அப்போதே பலம் பொருந்தியவர்களாக மாறுகிறீர்கள். எளிமையான விஷயங்களை அனைவருமே செய்வார்கள். அங்கே போட்டிகள் அதிகம் என்பதால், உங்களுக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு. அனைவரும் செய்ய கடினமாய் உணரும் விஷயத்தை கையில் எடுங்கள்.

  8. சமூக வலைதளங்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை கபளீகரம் செய்கிறது என்பதை உணருங்கள். அங்கே நேரத்தை செலவு செய்கிறீர்களா அல்லது முதலீடு செய்கிறீர்களா என்பதை அறிந்து செயல்படுங்கள். முடிந்தவரை சமூக வலைதளங்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயலுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com