இந்த 9 விஷயங்கள் உங்களை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்!

9 things will save you from many problems.
9 things will save you from many problems.
Published on

வாழ்க்கையில் சில விஷயங்களை யார் எவ்வளவு கூறினாலும் அதனைக் கண்டுக்கொள்ளாமல், அனுபவம் மூலம் அடி வாங்கித் தெரிந்துக்கொள்ளவே சிலர் விரும்புவார்கள். என்னத்தான் நமது பெற்றோர்கள் அதை செய், இதை செய்யாதே என்று கூறினாலும், நாம் அதனை ஒருமுறை செய்து பார்த்துவிட்டு பின் தான் முடிவெடுப்போம் அதனை மீண்டும் செய்யலாமா வேண்டாமா என்று. இன்னும் சொல்லப்போனால் பெற்றோர்களின் எச்சரிக்கை வெறும் வார்த்தைகளாய் தான் மனதில் பதியும். பிறகு அதனை செய்தால் விளைவு எப்படியிருக்கும் என்று யோசிக்கத்தான் தோன்றும்.

இதுவே நாம் அனுபவம் மூலம் தெரிந்துக்கொண்டால் அதன் விளைவு அறிந்து அந்த திசைப் பக்கமே போக மாட்டோம். அதேபோல் பல விஷயங்களையும் அதன்மூலம் கற்றுக் கொள்வோம். சிலர் வாழ்வில் பெற்றோர்கள் சொல்லும் விஷயங்கள் நடந்தாலும் அதுதானா என்று அடையாளம் தெரிந்துக் கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் செய்து கஷ்டப்படுவார்கள். ஆகையால் சில விஷயங்களை முன் கூட்டியே தெரிந்துக்கொள்வது நல்லது. அதேபோல் வார்த்தைகள் மூலம் புரிந்துக்கொள்ள முயற்சி செய்து அடிப்படாமல் அதிலிருந்து விளகிவிடுவது நல்லது. அந்தவகையில் இந்த 9 விஷயங்களைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

1.  ஒருவரை முழுவதுமாக நம்பினாலும், அனைத்தையும் அவரிடம் கூறிவிடாமல், சில விஷயங்களை உங்களிடமே மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

2.  பெரிய அளவில் ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், பலரின் விமர்சனங்களுக்கும் தயாராகிவிடுங்கள்.

3.  உங்கள் பணியை விட உங்களுடைய மன அமைதி மிகவும் முக்கியம். ஒருவேளை அது உங்களுக்கு பிடித்த பணி என்றால், விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் எதற்காகவும் மன அமைதியை இழந்துவிடாதீர்கள்.

4.  ஒன்றை தனியாகவே செய்து சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், யாராலும் எதுவாலும் உங்களை நிறுத்த முடியாது என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

5.  உங்களை சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. சில பேருக்கு சில சமயம் அவர்களையே பிடிக்கவில்லையாம்.

6.  எப்போதும் உங்கள் திட்டப்படியே நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆகையால் அனைத்திற்கும் பழகிக் கொள்ளுங்கள்.

7.  உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, சிரிப்பை மட்டும் விட்டு விடாதீர்கள். அதையே தொடர்ந்தால் சிரிப்பை மறந்து வாழ்க்கை முழுவதும் அவஸ்தைப் படுவீர்கள்.

8.  எந்த பாதையில் பயணிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அந்த பாதையில் நேர்மறையான ஆட்களும் உங்களுக்கு துணை நிற்கும் ஆட்களும் இருக்கிறார்களா என்பதை கவனியுங்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த பதிவு உங்களது பல மணி நேரத்தை சேமிக்கப் போகிறது.. கட்டாயம் படியுங்கள்! 
9 things will save you from many problems.

9.  உங்களால் கட்டுப்படுத்த முடியாத சில விஷயங்களைப் பற்றி நினைத்து மன அழுத்தம் கொள்ளாதீர்கள். கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை அப்படியே விட்டுவிடுங்கள்.

இந்த ஒன்பது விஷயத்தை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சிலருக்கு இந்த அர்த்தம் விளங்கினாலும் அனுபவம் மூலமே உணர்ந்துக்கொள்வார்கள். வார்த்தைகளிலேயே உணர்ந்துக்கொண்டால் நேரம் வீணாகாமலும் இருக்கும். வாழ்க்கையும் எளிதாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com