அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ரு யூத வியாபாரி மரணப்படுக்கையில் இருந்தார்.

அவர் தன் மனைவியிடம் மூத்தமகன் எங்கே என்று கேட்க,

உங்கள் வலப்பக்கத்தில் நிற்கிறான் என்றாள்.

இரண்டாம் மகன் எங்கே என கேட்க,

தலையருகே உள்ளான் என்றாள்.

மூச்சு வாங்க கடைசி மகன் எங்கே என கேட்க,

காலடியில் இருக்கிறான்.

உடனே சாகக்கிடந்த மனிதர் பதற்றத்துடன் எழுந்து, எல்லோரும் கடையை மூடிவிட்டு வந்துவிட்டால் வியாபாரம் என்ன ஆகும் என்றபடி துவண்டு விழுந்தார். இறந்து கொண்டிருக்கும் இவர் மனம் கல்லாப் பெட்டியில்தான் உள்ளது.

பலரது மனம் பணம், ஜாதி, புகழ், இப்படி ஏதோ ஒன்றில் மாட்டிக்கொண்டு வாழ்நாள் பூரா அவஸ்தைபடுகிறது. எப்போது பணத்தை மட்டுமே பிரதானமாக நினைப்பவர்கள் பிற மனிதர்களை மதிக்க மாட்டார்கள்.

ஒரு பண வெறியர் ஏரிக்குப் போனார். படகிலிருந்து ஏரியில் விழுந்து விட்டார். யாராவது காப்பாற்றினால் சொத்தையே கொடுப்பதாக அலறினார். அங்கே இருந்த காவலர் இவரைக் காப்பாற்றினார். ஒரு ரூபாயை அவரிடம் வீசினார். அந்தக் காவலர் ஒரு விளம்பரப் பலகையை காட்டினார். அதில் சிக்கிக் கொண்டவர் களைப் காப்பாற்றினால் அன்பளிப்பு 100 ரூபாய் என எழுதியிருந்தது.

பண வெறியர் உடனே, ஓஹோ நீ ஏதோ சேவை மனப்பான்மை உடையவன் என நினைத்தேன். இருந்தாலும் உனக்கு இப்படி பணத்தாசை கூடாது என்றார்.

காவலர் சிரித்தபடியே ஐயா பணம்தான் முக்கியம் என்றால் உங்களை சாக விட்டிருப்பேன். அதோ அந்த பலகையைப் பாருங்கள் என்றார் அதில் ஏரியில் விழும் சடலங்களை உடனுக்குடன் அப்புறப் படுத்தினால் 500 ரூபாய் சன்மானம் என்று எழுதியிருந்தது. மனிதர்களில் சிலர் இப்படி எல்லா நிகழ்வுகளையும் பணத்தால் மட்டுமே அளக்கிறார்கள்.

அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும். அது நம் காவல்காரன். அளவற்ற பணம் வந்தால் நாம்தான் அதைக் காப்பாற்ற வேண்டும். சரியாகச் சொன்னால் பணம் கால் செருப்பு போல். செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும். கூடுதலாக இருந்தால் காலை வாரி விடும். பணம் பயன்படுத்தவே.கொண்டாடி குவித்து வைக்க அல்ல. பணம் சம்பாதிப்பது மூச்சு விடுவது போல் எவ்வளவு காற்றை நாம் இழுக்க முடியுமோ அவ்வளவு இழுக்க வேண்டும். ஆனால் இழுத்த காற்று முழுவதையும் அப்படியே உள்ளே வைத்திருக்க முடியுமா? வெளியே விட்டேயாக வேண்டும். இந்த இயக்கம்தான் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
சந்தோஷமாக வாழ பழகிக் கொள்வோம்!
motivation article

ஒருவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். கோவில் குளம் தானம் தர்மம் எதுவும் செய்வது கிடையாது. அவர் நண்பர் எரிச்சலுடன் இவரிடம் நீ செத்தா சொர்க்கம் செல்வாயா நரகம் செல்வாயா என்றதற்கு, வியாபாரம் எங்கு நல்லா நடக்குமோ அங்கு போகணும் என்றாராம். எப்படி உள்ளது அவர் மனம்!

ஒரு குறிப்பிட்ட வயதில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த மாதிரியே, ஒரு குறிப்பிட்ட வயதில் சம்பாதிப்பதை நிறுத்திக் கொள்ளவும் தெரிய வேண்டும். கல்லறைக்குள் போகும்போது சில்லறை பற்றிய கவலையோடு போகக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com