அப்துல் கலாம் சொன்ன வெற்றிக்கான வழிகள்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்...
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்...

ன்னதான் நாம் நம்பிக்கையுடன் இருந்தாலும், சில நேரங்களில் நம்முடைய சுற்றுச்சூழல்களோ அல்லது வேறு ஏதேனும் தடைகளோ நமது செயல்களில்  சிறிது பின்னடைவை ஏற்படுத்தும். அது போன்ற நேரங்களில் சான்றோர்களின் இதுபோன்ற பொன்மொழிகளை படிப்பதாலும் கேட்பதாலும் நமக்குள் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். அந்த வழியில் மேதகு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் தன்னம்பிக்கை ஊட்டும் மொழிகளை இங்கே காண்போம்.

1. உங்கள் முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுக்க வேண்டாம். ஏனெனில். இரண்டாவது வெற்றியில் நீங்கள் தோல்வியுற்றால் உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன.

2. உன் வாழ்வினில் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை. உன் திறமையையும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளித்து செல்கிறது.

3. வெற்றிக் கதைகளை படிக்காதீர்கள். நீங்கள் செய்திகளை மட்டுமே பெறுவீர்கள். தோல்வி கதைகளை படியுங்கள். வெற்றி பெற சில யோசனைகளை பெறுவீர்கள்.

4.சவாலுக்கே தெரிவியுங்கள் நீங்களும் ஓர் வீழ்த்த முடியாத ஒரு சவால் ஆனவர்தான் என்று.

5.  வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வி அடையாதவர்கள் அல்ல. ஆனால் ஒருபோதும் விலகாதவர்கள்.

6. உன் வேலைக்கு நீ தலை வணங்கினால் நீ யாருக்கும் தலைவணங்க வேண்டிய தேவையில்லை. அதுவே நீ வேலைக்கு தலை வணங்காவிட்டால் நீ அனைவரிடமும் தலைகுனிய நேரிடும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை அதிகரிக்க உதவும் ஏழு பயனுள்ள யோகா பயிற்சிகள்!
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்...

7. நீ தூங்கும்போது வருவது கனவல்ல. உன்னை தூங்க விடாமல் செய்யும் கனவே கனவாகும்.

8. அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி அனுபவம் எல்லாவற்றையும் விட ஆர்வம்தான் முக்கியம்.

9.சூரியனாக பிரகாசிக்க ஆசைப்பட்டால் நீ சூரியனாக எரிய வேண்டும். அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள்  உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும்.

10. வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் துவங்கும் என்பதால், முதல் முயற்சியில் தோல்வி அடைந்து விடுமோ என்ற பயப்பட வேண்டாம். 

அவமானங்களை பொருட்படுத்தாதீர்கள். ஆனால் ஒரு முறை செய்த தவறை இன்னொரு முறை செய்யாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com