பிரபலங்கள் கண்ட சறுக்கல்களும் சாதனைகளும்....

Sir James Dyson
Sir James Dyson
Published on

வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் எவ்வளவு சறுக்கள் கண்டு இருக்கிறான் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? பல பிரபலங்கள் வெற்றிக்குப் பின்னாலும் எவ்வளவு சறுக்கல்கள் இருந்திருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம். இதை படித்து முடித்தவுடன் உங்கள் மனதிலும் தனி தெம்பு பிறக்கும் பாருங்கள்.

சர் ஜேம்ஸ் டைசன் (Sir James Dyson)

1990 களின் வாக்கில் வீடு சுத்தம் செய்யும் கருவியான வாக்யூம் கிளினரைக் (Vacuum) கண்டுபிடித்த டைசன் அதற்கு முன்னர் பலமுறை தோல்வியைத் தழுவியவர் என்பது தான் சுட்டிக் காட்ட வேண்டிய விஷயம்.

அவரது வெற்றிகரமான G-Force Vacuum கிளினர் அதற்கு முன்பு அது 5126 முறை தோல்வியைத் தழுவிய ஒரு கருவி என்பதனை யாராலும் ஒத்துக் கொள்ள முடியாது. டைசன் தனது 15 வருட கால கடும் உழைப்பில் 5126 முறை புதிய வடிவங்களில் Vacuum கிளினரை முயற்சித்துப் பின்னர் தான் வெற்றிகரமான வடிவத்தை உருவாக்கினார். 5126 முறை தோல்வியைச் சந்தித்தவர் என்பதனை ஒத்துக் கொள்வதில் டைசன் எப்போதும் பெருமை கொள்கிறார். 20 வருடங்களுக்கு முன்னர் எனது தயாரிப்பினை சந்தையில் விற்க முயற்சித்து இருந்தால் ஒரு விளையாட்டு பையனாகத்தான் என்னை மதித்திருப்பார்கள் என்று தனது தோல்வியைக் குறித்து ஒப்புக்கொள்கிறார். தற்போது இவரது சொத்து மதிப்பு 4.6 பில்லியனையும் தாண்டுகிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg)

சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், ஆவணப்பட இயக்குநர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டிருக்கிற ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கிற்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைத்து விடவில்லை. தான் பயின்ற கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் சினிமா பள்ளியில் இவரது படைப்பு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. தான் பயின்ற கல்லூரியிலே தோல்வியைத் தழுவியவர்தான் பின்னாட்களில் 3 ஆஸ்கர் விருதுகளைக் குவித்துள்ளார்.

Steven Spielberg
Steven Spielberg

இவர் இயக்கிய படங்கள் 9 பில்லியனுக்கும் அதிகமாக வசூலைப் பெற்றுத் தந்திருக்கிறது. இவரது திறமையை உணர்ந்து கொள்ள தவறிய கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் அவரது நினைவாக ஒரு கலை பள்ளியை உருவாக்கியுள்ளது என்பதும் வெற்றிப் படிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஜே.கே. ரவுலிங் (J.K. Rowling)

தோல்வியும் சில நேரங்களில் மிக சிறந்த வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதற்கு ஜே.கே. ரவுலிங் ஒரு மிகச் சிறந்த உதாரணம். விவாகரத்துப் பெற்று ஒரு குழந்தைக்கு தாயாக மிகுந்த மனச்சோர்வில் வாழ்ந்து வந்த இவர் தொடர்ந்த வாசிப்பு பழக்கத்தைக் கொண்டிருந்தவர். திடீரென்று ஒரு நாவலை எழுதி பிரபலமானார்.

J.K. Rowling)
J.K. Rowling)

இத்தகைய திடீர் எழுத்து என்பது சாதாரணமாக வந்துவிடவில்லை. பல தோல்விகளின் அனுபவம் மட்டுமே அதற்கு முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. தற்போது உலகளவில் மிகுந்த பணக்காரராக இருக்கிற ஜே.கே. ரவுலிங் “எனது தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே கற்பனையான உலகினைத் தேடிச் சென்றேன் ” என்று தனது படைப்பினைக் குறித்து தெரிவித்துள்ளார். மாயா ஜால உலகத்தைக் குறித்த அவரின் தொடர் எழுத்துக்கள் உலகின் முன்னணி படைப்பாளி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம். “வாழ்க்கையில் தோல்வி அடையாமல் எதையும் சாதிக்க முடியாது. அப்படி தோல்வி அடையாமல் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்களது வாழ்வை வாழவே இல்லை என்று அர்த்தம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜெர்ரி சீன்ஃபீல்ட் (Jerry Seinfeld)

சிறந்த காமெடியன், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்டிருக்கிற ஜெர்ரி தனது பயணத்தை வெற்றியில் இருந்து ஆரம்பிக்க வில்லை. தனது இளம் வயதில் மேடை நகைச்சுவை நடிகராகப் பணியாற்றினார். தனது முதல் நாடக மேடைக்குச் செல்லாமல் பார்வையாளர்களை பார்த்து பயந்து மேடைக்குச் செல்லாமலே நின்றுவிட்டார்.

பின்னர் கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டு அதே மேடையில் இரவு தொடங்கி அடுத்த நாள் காலை வரை பார்வையாளர்களை மகிழ்வித்து சிறந்த கலைஞர் என்ற பெயரையும் எடுத்தார். அவரது பயிற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மட்டுமே ஒரு சிறந்த கலைஞனாக உருவாக்கி இருக்கிறது.

மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan)

மிகச்சிறந்த கூடைப் பந்து ஆட்டக்காரரான மைக்கேல் ஜோர்டனை உண்மையில் அவரது உயர்நிலை பள்ளி பயிற்சியாளர் பெயர் பட்டியலில் இருந்து எடுத்திருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு அவர் கொடுத்த வாய்ப்பினால் மிகச் சிறந்த கூடைப் பந்தாட்ட வீரராக மாற முடிந்தது. காரணம் மைக்கேல் ஜோர்டன் தொடர் வெற்றி ஆட்டக்காரர் இல்லை என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார்.

“நான் எனது விளையாட்டில் 9000 க்கும் அதிகமான Shot களைத் தவற விட்டிருக்கிறேன். 300 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புக்களை இழந்துள்ளேன். மேலும் 26 போட்டிகளில் எனது அணி நான் தவற விட்ட Shot களினால் வெற்றி வாய்ப்பை இழந்தது. நான் தொடர்ந்து எனது விளையாட்டில் தோல்வியைத் தழுவிக்கொண்டே இருந்தேன். அதனால்தான் நான் வெற்றியடைய முடிந்தது” என்கிறார். தோல்வி ஒரு போதும் தடையாக இருப்பதில்லை என்பதனை இவரது முயற்சியே தெளிவு படுத்தும்.

என்ன கஷ்டங்கள் வந்தாலும், என்ன துன்பங்கள் வந்தாலும் அனைத்தையும் பொறுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதே இலட்சியமாக கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com