செயல்பாடுகளே வெற்றியின் விதைகள்!

secret of success...
seeds of success...
Published on

லகமே ஒரு நாடக மேடை. நாம் எல்லோரும் நடிகர்கள் என்று சொன்னார் ஷேக்ஸ்பியர். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். நம்மிடமிருந்தும் சிலர் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.

எப்போதும் நம் கண்களும், காதுகளும், கவனமாக இருக்க வேண்டும். கண் பார்த்ததைச் செய்ய கைகளுக்கு உத்தரவு இட வேண்டும். காதுகள் கேட்டதை மூளைக்கு அனுப்பி, அருகிலுள்ள நல்லது கெட்டதை அறிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு கண்டதையும் கேட்டதையும் ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கொண்டு, எவன் செயலில் இறங்குகிறானோ அவன் வெற்றியின் விதையை விதைத்தவனாகிறான்.

முதலில் கொண்டை ஊசியைக் கொண்டையில்லாமல் தான் செய்தார்கள். அதனால் அது அடிக்கடி கீழே விழுந்து கொண்டிருந்தது. ஒரு பெண் அந்த ஊசியை ஒரு மாதிரி வளைத்து கீழே விழாமல் இருக்கச் செய்தாள். இதைக் கண்ட அவளின் கணவனின் மூளையில் உதித்ததுதான் கொண்டை ஊசிக்குக் கொண்டை வந்த கதை. அவனின் பார்வை அதிர்ஷ்டத்தை அள்ளித் தந்தது.

ஒருவர் ஒரு காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தார். தாகம் எடுத்தால் குடிப்பதற்கு எதுவும் கிடைக்குமா? என்று பார்த்தார். ஒன்றும் கிடைக்காததால், அங்குள்ள ஒரு மரத்தின் பிசினை எடுத்து வாயில் போட்டார். உமிழ்நீர் சுரந்தது. தாகம் தீர்ந்தது. இதை வைத்து யோசித்தார். அதனால் இன்று கோடிடான கோடிப் பேர் சுவைக்கும் சுவிங்கம் கிடைத்தது. அவரின் சுவையினால் அதிர்ஷ்டம் அடித்தது.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கே வித்திடுகிறது!
secret of success...

ஒரு கண்ணாடி வேலை செய்பவரின் குழந்தைகள் பல உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து விளையாடினார்கள். அவர்களை கண்டிக்க வந்த தந்தை, அடுக்கி வைத்த கண்ணாடித் தூண்டுகளின் ஊடே தூரத்துப் பொருள்கள் பெரிதாகத் தெரிவாக அறிந்தார். அதிலிருந்து தூர திருஷ்டிக் கண்ணாடி என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.

மாபெரும் காரியத்தைச் செய்யக் காத்திருப்பவர்கள் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்கள். சாதாரண மானவர்களின் பார்வை சாதனைகளைச் செய்துவிடும். கூட மாபெரும் வெற்றியின் முதல்படி தோல்வி என்பார்கள். தோற்று விட்டோம் என்று முயற்சி செய்யாதவர்கள் வெற்றியை எட்டவே முடியாது. இதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com