தெரியாததை ஒப்புக்கொள்... தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெறலாம்!

Admit what you don't know... take a chance to find out!
motivational articles
Published on

நீங்கள் பக்கத்துத் தெருவுக்கு போக விரும்பினாலும் சரி, நிலவுக்கே போக விரும்பினாலும் உங்கள் பயணத்தை எங்கே துவங்க முடியும். இப்போது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்துதானே?. ஆன்மிகம் பயணத்திற்கு இருக்கும் இடத்தை விட்டு எழுந்து நிற்கும் போதே  சொர்க்க வாசலில் நின்றிருந்ததாக நீங்களாக நினைத்துக் கொண்டால் அது உங்களையே ஏமாற்றிப் கொள்ளும் கற்பனையாக இருக்க முடியுமே தவிர, உங்கள் பயணம் துவங்கவே துவங்காது.

எந்த வண்ணங்களை அணியவேண்டும். எந்த குணத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்த உயரத்தைக் தொடவேண்டும் என்பதை உங்களுக்கான ஒவ்வொன்றையும் உங்கள் ஆசைதான் முடிவு செய்கிறது.

எட்டிப் பிடித்துவிட்டால் வெற்றியைக் கொண்டாடும் நீங்கள்,  முடியவில்லை என்றால் வேதாந்தம் பேசுவீர்களா. ஒருவர் வேதாந்த வகுப்புகளுக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தார். எல்லாமே மாயை. நீ என்றும், நான் என்று  எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாமே ஒன்றுதான் என்றெல்லாம் கேட்டு கேட்டு தான் முற்றும் கற்றுத் தெளிந்துவிட்டதாக நினைத்தார். தெருவில் நடக்கும் போது தலையை உயர்த்தி நடந்தார். பசி எடுத்தது. சிற்றுண்டி சாலைக்கும் சென்றார். வயிறார உண்டார். பணம் கட்டாமல் வந்து விட்டார். ஏனென்றால் கல்லாவில் இருப்பவனும் நான்தானே என நினைத்தார். அவரை துரத்திச் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிபதியிடம்  "ஐயா,எல்லாமே நான் எதுவுமே. செய்யவில்லை. நீங்களும் வேதாந்த வகுப்புக்கு வந்திருந்தால் புரிந்து கொண்டிருப்பீர்கள் நான் சாப்பிட்டுட்டு நான் எதற்கு காசு கொடுக்க வேண்டும்." என்றார்.

நீதிபதி இவருக்கு பத்து கசையடி கொடுக்க உத்தரவிட்டார். அடி விழுந்ததும் இவர் துள்ளினான். "உங்களுக்கு வேதாந்தமே புரியவில்லையே செய்யாத தவறுக்காக ஏன் அடிக்கிறீர்கள்" என்றார். அதற்கு நீதிபதி "உங்களை யார் அடித்தார்கள். கசையடி கொடுப்பவன் வேறு. நீங்கள் வேறு அல்லவே. அவன் தன்னைத்தானே அடித்துக்கொள்கிறான்" என்றார்.

இதையும் படியுங்கள்:
வெற்றி என்ற இலக்கை அடைய உதவும் 8 சக்சஸ் பாயிண்ட்டுகள்!
Admit what you don't know... take a chance to find out!

உடனே இவர் ஐயோ நான் வேதாந்தி இல்ல. அடிக்காதீர்கள். காசு கொடுத்துவிடுகிறேன் என்றார்.

இப்படித்தான் மனதை தெளிவாக  வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள் சிந்தனை, கற்பனை, கவனம், வக்கிரம், புரிந்தது, புரியாதது என்று மனதின் வெவ்வேறு அடுக்குகளை  ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். இந்த பூமியில் கடவுள பலமுறை அவதரித்துள்ளார். யார் வந்தாலும் போனாலும் நீங்கள் வளரத் தயாராக இல்லாதவரை உங்கள் வாழ்க்கையை யாரும் மாற்றமுடியாது.

மகான்களால் மட்டுமே முழுமையான விழிப்புணர்வை கொண்டுவர முடியாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழக் கற்றுக்கொள்ளாவிட்டால் பத்தாயிரம் மகான்கள் வந்தாலும் புண்ணியமில்லை. மகான்களைப் பற்றிய புத்தகங்களை உந்து சக்தியாக பயன்படுத்துங்கள். அவற்றையே படிப்பினையாக நினைத்து ஓய்ந்து விடாதீர்கள். தேவையற்ற குப்பைகளை விலக்கினால்தான் அங்கே பொக்கிஷங்களை நிரப்ப முடியும். தெரியாது என்று ஒப்புக்கொள்ளும் போதுதான் அகங்காரம் விலகி, தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பைப்பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com