சாதிக்க வயது ஒரு தடையே அல்ல!

Motivation Image
Motivation Image

50 வயசுக்கு மேல் ஆகிவிட்டாலே, ‘’வயசாகிடுச்சி. என்னால எதுவும் முடியல. வாழ்க்கையில பாதி தாண்டியாச்சு. இன்னும் என்ன இருக்கு’’ என்று புலம்பலும், நிராசையுமாக சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அவர்கள் தாமாகவே வயதாகிவிட்டது, தனக்கு இனி உடல் இயக்கங்கள் குறைந்து விடும். நோய்கள் வந்து விடும் என்று நம்பத் தொடங்குகிறார்கள். தங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் செய்யும் செயல்களையே குறைத்துக் கொண்டு விடுவார்கள்.

ஆனால் 50 வயதிற்கு மேல் சாதித்தவர்கள் ஏராளம். சரோஜினி ராமச்சந்திரன் என்கிற பெண்மணி தனது 59 வது வயதில் மிகக் கடினம் என சொல்லப்படுகிற சார்ட்டட் அக்கவுண்டன்சி பரீட்சையை எழுதி பாஸ் செய்தார். அவருடைய கணவரும் சி.ஏ. படித்தவர். தன் மனைவியை ‘’நீயும் சி.ஏ எழுதலாமே’’ என்று சொன்னபோது  சிரித்தாராம். ஆனால் கணவர் இவரைத் தொடர்ந்து மோட்டிவேட் செய்ததனால் அவரால் அந்த கோர்சை முடிக்க முடிந்தது. தனது இரண்டு பிள்ளைகளும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நிலையில், தினமும் இரண்டு பஸ்கள் மாறிச் சென்று ஒரு பிரைவேட் வங்கியில் பிரான்ச் மேனேஜராக வேலை செய்து கொண்டு, குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து கொண்டு கடினமான சிஏ பரிட்சை எழுதி தேயுள்ளார்.  பொதுவாக இவருடைய வயதில் இருப்பவர்கள் கால் வலி, மூட்டு வலி என்று புலம்பிக்கொண்டு,  வீட்டு வேலைகளையே  செய்ய முடியவில்லை என்று  புலம்பும் வேளையில் இவர் போன்ற பெண்மணிகள் உண்மையில் கவனிக்கத் தகுந்தவர்கள்.

இந்தியாவையே தனது அற்புதமான குரலால் கட்டிப் போட்ட   இசைப் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் தனது பத்தாவது வயதில் பாட ஆரம்பித்து தன் முதுமையை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் 80 வது வயது வரையில் இசைக்கச்சேரிகள் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் ஓட்டப்பந்தயம் என்றாலே  உடனடியாக நினைவுக்கு வருபவர் உசேன் போல்ட். கடந்த 2009ம் ஆண்டில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை இவர் 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தவர்.

இதையும் படியுங்கள்:
எந்தக் கிழமையில் கருட தரிசனம் செய்தால் என்ன பிரச்சனை தீரும்?
Motivation Image

ஆனால் 100 மீட்டர் தொலைவை கடக்க 27.08 நொடிகளை எடுத்துக் கொண்ட ஒருவரை உலகம் பாராட்டுகிறது. ஏனெனில் அவர் நூறு வயதைக் கடந்த ஒரு முதியவர். தாய்லாந்தில் நடைபெற்ற 26 ஆவது சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 - 105 வயது வரையிலான பிரிவினருக்கு நடத்தப்பட்ட அனைத்து தடகளப் போட்டிகளிலும், சக போட்டியாளர்களை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார் சவாங் ஜன்ப்ராம் என்ற முதியவர்.

சாதிப்பதற்கும், சாதனை செய்வதற்கும் வயது ஒரு தடையை அல்ல என்பது இதன் மூலம் விளங்குகிறது. மன உறுதியும் நம்பிக்கையும்  இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம். வயது என்பது ஒரு எண் மட்டுமே. உடலுக்குத்தான் வயதாகிறது, மனதிற்கு அல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com