வெற்றி குறித்து அம்பேத்கர் சொன்ன 10 மோட்டிவேஷனல் கோட்ஸ்!

Ambedkar
Ambedkar
Published on

ந்திய அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் எனும் மாபெரும் மேதைக்கு என்றும் நிரந்தர இடமுண்டு. ஆம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த இந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களை மேம்படுத்தி பாமரர்களின் உரிமையை நிலை நாட்டியவர்.

டாக்டர் அம்பேத்கரின் ஞானம், தத்துவம், வாழ்க்கை பற்றிய மேற்கோள்கள் பலருக்கும் வெற்றியின் வழிகாட்டியாக இருந்து வருகிறது. அவற்றில் சில இங்கு உங்களுக்காக..

1.ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம் .

2. உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை.ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது.

3.மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் ஒருபோதும் தேவையில்லை.

4.எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான் .

5.சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் . குறிக்கோளை எட்டும் வரை தீ போல சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள் .

6.ஆடுகளைத் தான் கோவில்களின் முன் வெட்டுகிறார்கள் சிங்கங்களை அல்ல.ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள் .

7.இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் பயன் இல்லை. 

8.அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.

9.வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும்,பாராட்டா விட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்கத்  துவங்குவான்.

10.எவனோருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com