நீங்கள் Motivation வீடியோக்கள் அதிகம் பார்ப்பவரா? இது உங்களுக்குதான்!

நீங்கள் Motivation வீடியோக்கள் அதிகம் பார்ப்பவரா? இது உங்களுக்குதான்!
Published on

பெரும்பாலும் சுயமுன்னேற்றம் சார்ந்த விஷயங்களைப் பகிர்பவர்கள், சுற்றி வளைத்து ஒரே விஷயத்தைத்தான் கூறிக்கொண்டிருப்பார்கள். என்னதான் ஆயிரம் சுயமுன்னேற்ற புத்தகங்கள் படித்தாலும் அதில் கூறப்படுவது,

உடலை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனதை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

காலத்தை வீணடிக்காதீர்கள்.

அனைத்திலும் ஒருமித்த கவனத்தோடு இருங்கள் என்பதே மையக் கருத்தாகக் கொண்டிருக்கும்.

எனவே, பல சுயமுன்னேற்றப் புத்தகங்கள் படிப்பதற்கு ஏதோ 1,2 படித்தாலே போதுமானது. அதில் கூறப்படும் விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்தி பார்த்தாலே சில மாற்றங்களை அடைந்துவிட முடியும்.

நான் படித்த சில புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ராபின் ஷர்மா எழுதிய 5 Am Club என்ற புத்தகம். அதில் கூறப்படும் கருத்துக்கள் என்னவென்றால் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து நம் வேலையைப் பார்த்தால், வாழ்வில் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று கூறியிருப்பார்கள். நானும் அதை சிலகாலம் முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் என்னால் காலையில் செயல்படுவதை விட இரவில்தான் இன்னும் சிறப்பாக செயல்பட முடிகிறது.

அனைவருக்கும் ஒரே மாதிரியான தூக்க முறை இருப்பதில்லை. சிலர் பகலில் சுறுசுறுப்பாக இருப்போம். சிலர் இரவில் சுறுசுறுப்பாக இருப்போம். இந்த 5 Am Club புத்தகத்தில் கூறியுள்ளவாறு, அனைவருமே அதிகாலை 5 மணிக்கு எழுந்தால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறிவிட முடியாது. இந்த இடத்தில் இப்புத்தகத்தில் கூறிய விஷயங்கள் தவறாகிறது.

இதேபோல் அனைத்து சுயமுன்னேற்ற புத்தகங்களிலும் கூறும் விஷயங்கள் அனைவரது வாழ்விற்கும் ஒத்துவரும் என்று நம்புவது தவறு. இதுபோன்ற புத்தகம் எழுதுபவர்கள் அவர்களுடைய அனுபவத்தையும் அல்லது வேறு யாரோ செய்து பார்த்த அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வைத்து சில கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

இதை நாம் அப்படியே நம்முடைய வாழ்க்கைக்கு பொருத்திப் பார்ப்பது முடியாத ஒன்று. இங்கே அனைவருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 ஒவ்வொருவருடைய குடும்ப சூழல், சுற்றுப்புறம், எண்ண ஓட்டங்கள், தேவைகள் கடமைகள் முற்றிலும் மாறுபட்டவை. இதைப் பொறுத்தே நம்முடைய செயல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது முடிவெடுக்கப்படும். ஏதோ ஒரு புத்தகத்தில் கூறியுள்ளார்கள் என்பதை நம்பி முற்றிலும் உங்களுடைய வாழ்க்கைமுறைக்கு ஒத்து வராத விஷயத்தை முயற்சித்து பார்ப்பது சில சமயங்களில் ஆபத்தாக முடிந்துவிடும்.

 யார் என்ன கூறினாலும், அது சார்ந்த சரியான முடிவை எடுக்க வேண்டியது முழுக்க முழுக்க உங்கள் கடமை. ஏனென்றால் நம்முடைய ஒவ்வொரு செயலின் முடிவுகள்தான் நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் நிர்ணயம் செய்கிறது. ஒருபோதும் யாரோ ஒருவரை நம்பி உங்கள் வாழ்க்கைக்கான முடிவை எடுக்காதீர்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கையும் தைரியமும் இருந்தால் மட்டுமே எதுவாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com