பிறர் உங்களை மதிக்க வேண்டுமென்றால் அமைதியாய் இருங்கள்!

Be quiet if you want others to respect you.
Be quiet if you want others to respect you.

னது வாழ்க்கையில் பலர் நல்ல நிலைகளை அடையும்போது நீங்கள் மட்டும் அமைதியாக கவனிப்பதாக உணர்கிறீர்களா? நீங்கள் அமைதியாக இருப்பதினாலே உங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை என நினைக்கிறீர்களா? ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல இது உங்களுக்கு மரியாதையைப் பெற்றுத் தரக்கூடிய பலம். 

ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்க, அவருக்கு தேவையான மரியாதை கிடைக்க, தைரியமாகவும், சத்தமாகவும் பேச வேண்டும் என்று யார் சொன்னது? நன்றாக பேசுபவர்களுக்குத்தான் மரியாதை கிடைக்கும் என்ற விதியை யார் எழுதியது? வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், அதிகம் சாதித்த நபர்களில் அமைதியாக இருந்தவர்களே ஏராளம். அவர்கள் சிந்தனையாளர்களாகவும், திட்டமிடுபவர்களாகவும், அனைத்தையும் கவனித்து செயல்படுபவர்களாகவும் இருந்தனர். 

அவர்கள் அனைத்தையும் தங்களின் உரத்த குரலால் சாதிக்கவில்லை. அமைதியாக இருந்து சரியாக செயல்பட்டதனாலேயே உயர்ந்த இடத்திற்கு சென்றனர். எனவே அமைதியாக இருப்பதென்பது ஒருபோதும் பலவீனமாகாது. இது உங்களை கவனிக்கக் கூடியவராகவும், சிந்திக்கக் கூடியவராகவும், நல்ல ஞானம் உள்ளவராகவும் மாற்றுகிறது. மற்றவர்கள் தங்களின் வாழ்க்கையை தவறவிட்ட விஷயங்களை புரிந்துகொள்ள அமைதி உங்களை அனுமதிக்கிறது. 

இப்போது சொல்லுங்கள் அமைதி என்பது பலவீனமா? 

சிலரை பார்த்திருப்பீர்கள். அவர்கள் வந்தாலே அனைவரும் மரியாதை கொடுப்பார்கள். அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் பிறர் அவருக்கு இத்தகைய மரியாதை எப்படி கொடுக்கிறார்கள் என்பதை எப்போதாவது கவனித்ததுண்டா. அத்தகைய நபர் எங்கிருந்தாலும் அவர்களின் இருப்பை நம்மால் உணர முடியும். உங்கள் உடல் மொழி, நீங்கள் பிறரிடம் பழகும் விதம், உங்களின் ஆழமான நம்பிக்கை போன்றவை அனைத்தும்தான் நீங்கள் யார் என்பதை பேசுகிறது. 

ஒரு உறுதியான ஹேண்ட் ஷேக், அன்பான புன்னகை, கண்களால் தொடர்பு கொள்ளும்முறை போதும் உங்களின் மதிப்பை ஒருவர் அறிவதற்கு. நீங்கள் பலர் குழுமியிருக்கும் கூட்டத்துக்கு நடுவே கூச்சலிட்டு பேச வேண்டிய தேவையில்லை. அவர்களின் அமைதியும், செயல்பாடும் அவர்களைப் பற்றி அதிகம் பேசும். நீங்கள் எல்லா இடங்களிலும் இயல்பாய் இருந்தாலே அது பார்ப்பவர்களுக்கு ஒரு வசீகரத்தை ஏற்படுத்தும். 

உங்களுக்கான தனித்துவமான வழியில் கற்றுக்கொள்ளவும், செயல்படவும், வழிநடத்தவும் தெரிந்தால்போதும் உங்களின் அமைதி பிறரை ஈர்க்கும் பயங்கரமான ஆயுதமாக மாறும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com