நாம் ஒரு காரியம் செய்யும் பொழுது அது தடைகள் வரும். ஆனால் அந்தத் தடைகளுக்கு பின்னால் வெற்றிக்கும் ஒரு வழி இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அந்தத் தடை எதனால் ஏற்படுகிறது. அந்த தடைக்கு மாற்று வழி உண்டா என நாம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும் அந்த தடை தகர்த்துவிடும்.
நாம் செய்யும் காரியம் தடைப்பட்டு விட்டால் நமக்கு ஏற்படும் மனசோர்வுதான் முதல் பலவீனம். அதை விடுத்து இந்த தடையை எப்படி உடைக்க வேண்டும் என்று சாமர்த்தியமாக இருந்து நாம் செயல்பட்டால் இந்த தடை என்ன எந்த தடையை வேண்டுமானாலும் நாம் உடத்து விடலாம் என மன தைரியமும் நம்பிக்கையும் நம் மனதில் பிறந்துவிடும். அதை உணர்த்தும் ஒரு புராணக் கதை எடுத்துக்காட்டு இப்பதிவில்.
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஆசிரியராக விளங்கியவர் துரோணார். வில்வித்தையில் மிகப்பெரும் திறன் பெற்றவர் துரோணர். காட்டிலே வேட்டையாடிப் பிழைக்கும் ஏகலைவன் வில்வித்தையைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாகத் துரோணரிடம் சென்று கேட்டான். ஷத்ரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் வில்வித்தையைக் கற்றுக்கொள்ள முடியும், வேட்டுவ குலத்தில் பிறந்த ஏகலைவனுக்குக் கற்றுத்தர இயலாது என்று துரோணச்சாரியார் கூறிவிட்டார்.
ஏகலைவன் எப்படியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டான். எனவே, துரோணரது சிலையை வடிவமைத்து அதன் முன்நின்று குருவாகக் கொண்டு பயிற்சி செய்தான். ஒவ்வொரு நாளும் முயற்சிசெய்து தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு பயிற்சி செய்து வெற்றியும் பெற்றான். வில்வித்தையில் நிகரற்றவனாகக் கருதப்பட்ட அர்ச்சுனனுக்கு இணையாக ஏகலைவன் வில்வித்தையில் உயர்ந்து நின்றான்.
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தணியாத ஆர்வம் ஏகலைவனை வில்வித்தை வீரனாக்கியது. எல்லாத் தடைகளுக்கும் மாற்று வழி ஒன்று இருக்கும். இந்த உலகில் இன்று காணும் விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் இப்படித் தடை கடந்து உருவானதுதான்.
இப்பொழுது புரிந்து இருக்குமே ஒவ்வொரு தடைக்கும் ஒரு மாற்று வழியைச் செய்யும் உண்டு என்பதை அதனால் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு தடைகளை தெறிக்கவிடுங்கள்.