இந்த 6 பேரை பிளாக் செய்தாலே போதும் கிடைக்குமே வெற்றி!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

வெற்றியாளர்களுக்கான சூத்திரங்களை கற்றுத்தரும் நிகழ்ச்சி அது. பலரும் பலவிதமான ஆலோசனைகளை தந்து தன்னம்பிக்கையை விதைத்து கொண்டிருந்தனர். மதிய நேரம் வந்துவிட்டது. அனைவருக்கும் தன்னம்பிக்கை கதைகளை கேட்டு கேட்டு சலித்து விட்டது. எப்போது பார்த்தாலும் மற்றவரின் வெற்றிக் கதைகளை கேட்டுக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்? இதை செய், செய் என்று  சொல்கிறார்களே தவிர இதை செய்யவேண்டாம் என்று யாராவது சொல்கிறார்களா என்றெல்லாம் அந்த வகுப்புக்கு வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது  சாதாரண எளிய மனிதர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்தால்  பயிற்சியாளர் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. அவர் அந்த இளைஞர்களின் முன்னின்று இந்த வார்த்தைகளை சொன்னார்.

"இளைஞர்களே கவனியுங்கள். இந்த உலகம் போலி மனிதர்களால் நிறைந்துள்ளது. மக்களை நம்புவது கடினமான ஒன்றாகிறது. சிலர் உங்களிடம் பொய் சொல்கிறார்கள், மற்றவர்கள் உங்களைக் கையாளுகிறார்கள், உங்களை மிதிக்கிறார்கள், உங்களைப் பயன்படுத்துகிறார்கள், உங்களை வெறுக்கிறார்கள். இப்படி இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை பிளாக் செய்து விட்டு வெற்றியை நோக்கிப் செல்லுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்."

அந்த இளைஞர்களுக்கு சலிப்பு மறைந்து போய் உற்சாகம் கரைபுரண்டு வெகு நேரம் கரகோஷங்களை எழுப்பினர். ஒரு துடிப்பான இளைஞர் அவரைப் பின் தொடர்ந்து சென்று "ஐயா இவ்வளவு பெரிய அறிவுரை தந்த நீங்கள் யார்? " எனக் கேட்க அவர் "நான் பிளாக் செய்யாத ஒரு நபரால் நம்ப வைத்து ஏமாற்றப் பட்டவன்" அந்த மனிதர் இந்த வார்த்தைகளை உதித்து விட்டுக் காணாமல் போய்விட்டார்.

தற்போது இணையதள நட்புகளில் பிடிக்காதவர்களை பிளாக் செய்வது ஃபேஷன் ஆகிவிட்டது. இதையே மாற்றி யோசிப்போம். நம் வாழ்வில் எதிர்வரும் அனைவரும் நமக்கு விருப்பமானவர்களாக இருப்பதில்லை. நம் வெற்றிக்குத் தடையாகவும் சிலர் இருப்பதுண்டு. எப்படி அவர்களை இனம் காண்பது? யாரை யெல்லாம் நாம் பிளாக் (விலக்க) செய்ய வேண்டும்?

சுயநலவாதிகள்

நம்மிடம் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு நமக்கு ஒரு உதவி என்று வரும்போது விலகிப்போகும் நபர்களை தயங்காமல் பிளாக் செய்யுங்கள்.

சந்தர்ப்பவாதிகள்

சூழலுக்கு ஏற்ப மாற்றிப் பேசும் அல்லது நடக்கும் சந்தர்ப்பவாதிகளை நம்பவே நம்பாதீர்கள். இவர்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் தாராளமாக இவர்களை பிளாக் செய்யுங்கள்.

தோல்வியை ஏற்காதவர்கள்

வாழ்க்கை என்றால் வெற்றி தோல்வி வருவது சகஜம். ஆனால் தோல்வியை ஏற்காமல் சதா அதையே நினைத்து புலம்புபவர்களை பக்கத்தில் சேர்க்காதீர்கள். அந்த எதிர்மறை நமது வெற்றிக்கு தடையாகிவிடும்.

சோம்பேறிகள்

வெற்றிக்குத் தடையாக இருப்பதில் முக்கியமானது சோம்பல். எதையும் செய்யத் துணியாமல் சோம்பலாக இருப்பவர்களை அவர்கள் யார் என்றாலும் பிளாக் செய்து விடுங்கள்.

ஈகோ உள்ளவர்கள்

தான் என்ற ஈகோ உள்ளவர்கள் உங்களை முன்னேற விடாமல் நிச்சயம் தடுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு தாங்கள் மட்டுமே முன்னணியில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆகவேதான் எனும் ஈகோ உள்ளவரை பிளாக் லிஸ்டில் வையுங்கள்.

மரியாதை இல்லாதவர்கள்

சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம். மரியாதை இன்றி பேசுபவர்கள் மற்றும் மரியாதை தராத நபர்களையும் பிளாக் செய்ய தயங்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com