Che Guevara Quotes: உத்வேகம் தரும் சே குவேராவின் 15 பொன்மொழிகள்!

Che Guevara Quotes
Che Guevara
Published on

அர்ஜென்டீனாவைச் சேர்ந்த மாபெரும் புரட்சியாளர், மருத்துவர் மற்றும் பல புரட்சிப் போர்களில் பங்குப்பெற்ற ஒரு போராளியும்தான் சே குவேரா. மார்க்சியவாதியான இவர் உலகெங்கிலும் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடி அதில் வெற்றியும் கண்டார்.

கொரிலா போர் முறையில் வல்லவராகத் திகழ்ந்த இவர், அது குறித்தப் புத்தகங்களையும் எழுதினார். பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து இவர் கியூபாவின் விடுதலைக்காகப் போராடினார். மேலும் கியூபாவின் மத்திய வங்கியிலும் 14 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.

அந்தவகையில் சே குவேராவின் சிறந்த 15 பொன்மொழிகள் குறித்துப் பார்ப்போம்.

1.  நீ ஊமையாய் இருக்கும்வரை, உலகம் செவிடாய் தான் இருக்கும்.

2.   நான் சாகடிக்கப்படலாம். ஆனால், தோற்கடிக்கப்படமாட்டேன்.

3.  "எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ? அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்."

4.  விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.

5.  "இந்தப் பூமியில் உள்ள பெரிய பணக்காரர்களின் அனைத்துச் சொத்துக்களையும் விட, ஒரு மனிதனின் வாழ்க்கை பல மில்லியன் மடங்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் மிகச் சரியாகக் கற்றுக்கொண்டோம்."

6.  புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும்.

7.  அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும்.

8.  இந்த உலகின் எந்தப் பகுதியிலும், எந்தவொரு நபருக்கும் எதிராக எந்தவொரு அநீதி  இழைக்கப்பட்டாலும், முதலில் அதை ஆழமாக உணர முயற்சி செய்யுங்கள். அதுவே ஒரு புரட்சியாளரின் மிக அழகான பண்பாகும்.

9.  சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.

10. நான் சிலுவையில் அறையப்படுவதை விட, என் கைக்கு எட்டக்கூடிய அனைத்து ஆயுதங்களையும் கொண்டு நான் போராடுவேன்.

11. சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழியாகும்.

12. இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும். இந்த உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெற்றியடைய இந்த மூன்று பயங்களை கைவிடுங்கள்!
Che Guevara Quotes

13. “நீ என்னைக் கொல்ல வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். சுடு கோழையே, நீ ஒரு மனிதனை மட்டுமே கொல்லப் போகிறாய்.”

14. மனிதர்களை மிருகங்களாக மாற்றுவதே ஏகாதிபத்தியத்தின் இயல்பு.

15. ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரப்பட்டால், நீயும் என் தோழன்.

வாழ்க்கையில் ஏற்படும் பல தடைகளுக்குப் போராட்டம் குணம் என்பது மிகவும் அவசியம். அந்தப் போராட்ட குணங்களுக்கு, சே குவேராவின் வார்த்தைகள் அதைவிடவும் மிகவும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com