Concentration tips: இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணா உங்க மூளை ராக்கெட் வேகத்துல செயல்படும்!

Concentration tips
Concentration tips
Published on

கவனக்குவிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட வேலை அல்லது எண்ணத்தின் மீது நம் மனதை ஒருமுகப்படுத்தி, மற்ற கவனிச்சிதறல்களை ஒதுக்கி, முழுமையாக அதில் ஈடுபடும் ஒரு உளவியல் செயல்பாடாகும். நாம் பல தூண்டுதல்களை எதிர்கொள்ளும் பொழுது அவற்றுள் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கு நம் கவனத்தை செலுத்துவது.

1. கவனக்குவிப்பு ஏன் முக்கியம் (Why is concentration important?):

கவனக் குவிப்பு ஆற்றல் நம்மை ஒரு வேலையை திறம்பட செய்ய வைக்க உதவும் ஒரு அத்தியாவசியமான மனதின் செயல்பாடாகும். கவனக் குவிப்பு நம் நினைவாற்றல், மொழித்திறன், பிரச்சனை தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு அவசியமானதும், முக்கியமானதும் ஆகும்.

கவனக்குவிப்பு ஏன் முக்கியமானது தெரியுமா? அது நம் தன்னம்பிக்கையை அதிகரித்து, உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த உதவுவதன் மூலம் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட முடியும்.

2. உங்கள் கவனத்தை மேம்படுத்த எளிய கவனக்குவிப்பு குறிப்புகள் (Simple concentration tips to improve your focus):

  • தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் வெளிப்புறத் தூண்டுதல்களை ஒதுக்கி வைப்பது கவனச் சிதறல்களை தவிர்க்க உதவும்.

  • மனதை அங்குமிங்கும் அலையவிடாமல் இருக்க மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளான யோகா, தியானம் போன்ற பயிற்சிகளின் மூலம் கவனக்குவிப்புத் திறனை மேம்படுத்த முடியும்.

  • மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகள் கவனச்சிதறலை ஏற்படுத்தும். எனவே மனதை எப்பொழுதும் அமைதியாகவும், லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்துக்கொள்ளப் பழக வேண்டும்.

  • கவனத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

  • போதுமான தூக்கம் அவசியம். தினமும் போதுமான அளவு ஓய்வும், தேவையான அளவு உறங்குவதும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியம். அத்துடன் ஒரே நேரத்தில் பல பணிகள் செய்வதை தவிர்த்து ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துதல் நல்ல பலனளிக்கும்.

3. மாணவர்களுக்கான கவனக்குவிப்பு குறிப்புகள் (Concentration tips for students):

இன்றைய மாணவர்களுக்கு அவர்களைச் சுற்றி பல நூறு விஷயங்கள் நடக்கும் போது கவனம் செலுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். கவனத்தை கவனத்தோடு கையாண்டால் வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

  • தினமும் ஐந்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து சுவாசத்தை கவனிப்பதன் மூலம் மனதை ஒரு விஷயத்தில் நிலை நிறுத்தும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

  • மொபைல், போன், டிவி போன்ற டிஜிட்டல் சமூக ஊடகங்கள் கவனச்சிதறல்களை ஏற்படுத்தும். அவற்றை அதிகம் உபயோகிப்பதை குறைப்பது அவசியம்.

  • கவனக்குவிப்பை அதிகரிப்பது நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்த உதவும். பாடங்களை சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு அதில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் கவனச்சிதறல்களை தவிர்க்கலாம்.

  • ஆர்வமுள்ள பாடங்களை படிக்கும் பொழுது கவனம் மேம்படும். எனவே அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை படிக்கவும், எழுதவும், பேசவும் ஊக்குவிக்க வேண்டும். ஆர்வம் ஏற்பட ஏற்பட கவனக்குவிப்பு தானாக வந்து சேரும்.

மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தொடர்புடையதாக இருக்கும் போது அவர்களின் கவனம் மேம்படும். பாடங்களை நன்றாக புரிந்து கொள்ளவும், நினைவில் கொள்ளவும் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், கற்றல் உத்திகளை கையாளவும் பழக்க வேண்டும்.

4. கவனக்குவிப்பை மேம்படுத்தும் உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் (Foods and habits that improve concentration):

  • புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி கவனக்குவிப்பை அதிகரிக்கும்.

  • அவுரிநெல்லிகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்களால் நிறைந்தவை.

  • மீன் மற்றும் பாதாம் போன்ற கொட்டைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும்.

  • பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் நிறைந்த சமச்சீர் உணவு மூளைக்கு தேவையான ஆற்றலை வழங்கி செயல்பாட்டை மேம்படுத்தும்.

  • முழு தானியங்கள், நல்ல கொழுப்புகள் நிறைந்த வெண்ணெய் ஆகியவை மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை.

  • மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவும் உடற்பயிற்சிகள் செய்வதும், மனதை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா போன்றவற்றை பழகுவதும் நல்லது.

ஆரோக்கியமான உணவு போதுமான தூக்கம் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் கவனக்குவிப்பை மேம்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com