
தேர்வு முடிவுகள் வந்த பிறகு மாணவர்கள் பலவிதமான உணர்ச்சிகளை எதிர்கொள்ளலாம். சிலருக்கு இது மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரலாம், மற்றவர்களுக்கு இது ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கலாம். எதுவாக இருந்தாலும், இந்த நேரத்தில் அவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பது மிகவும் முக்கியம். இந்த கட்டுரையில், தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் சில ஊக்கமூட்டும் மேற்கோள்களைப் பார்ப்போம், இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.
தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா? என்று வருந்தாதே! நீ தனியாக போராடுவதே வெற்றிதான்!
ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்துவிடலாம். ஆனால் - ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்!
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயபோட்டு விடலாம்!
ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசும் பாராட்டும் இருக்கலாம் ஆனால் அவனுக்கு பின்னால் நாங்கள்தான் இருக்கின்றோம் அவமானம், நிராகரிப்பு!
மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை முடியாது என்பது முற்றுப்புள்ளி! முடியும் என்பது வெற்றி புள்ளி!
புத்திசாலியா, முட்டாளா என்பதை தெரிய வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்! வாழ்வின் பாடத்தை கற்றுக்கொள்ள பெற்றோர்கள் கடந்து வந்த பாதையை அறிந்து கொண்டாலேபோதும்!
நிறைய காயங்களுக்கு பிறகுதான் கனவுகள் எல்லாம் நனவாகும்!
வாழ்க்கையில் தவறுகளை செய்யபயப்படாதீர்கள் ஏனெனில் - தவறுகளில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்ள முடியும்!
இந்த இடத்தில் இருக்கிறோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம்! என்பது முக்கியமில்லை; எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம்!
துயரங்கள் துரத்தும் :துவண்டு விடாமலும்,கவலைகள் நெரிக்கும் கலங்கிவிடாமலும், தோல்விகளை கேள்விகளாக்கி... தடைகளை உடை ! தடம் பதி! கரம் தொடு! லட்சியம் கொள்! நிச்சயம் வெற்றி காணலாம்!
நாம் உயரும்போது சில விமர்சனங்கள் வரும்! அதை பொருட்படுத்தாமல் இருந்தால் வெற்றியும் புகழும் நமக்கே சொந்தம்! துவண்டு போவேனே தவிர, தோற்றுப் போகமாட்டேன் என சூழுரை!
முதலில் உன்னை நேசி! உன் உடலும் உள்ளமும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், வைத்துக்கொள். முடிந்த அளவுக்கு இயற்கையோடு சார்ந்து இரு!
வலி என்று ஒதுக்கிவிடாதே - அதுதான் உன்னை வலிமையாக்கும்.
தோல்வியை கண்டு துவண்டு விடாதே! அதுவே உன்னை வெற்றியாளன் ஆக்கும்!
வெற்றி அவ்வளவு தூரத்திலும் இல்லை !தோல்வி அவ்வளவு பக்கத்திலும் இல்லை! போராடுங்கள் ஜெயிக்கலாம்!
தேடுங்கள் நிச்சயம் ஏதாவது கிடைக்கும்! சில சமயங்களில் தேடியது பல சமயங்களில் தேடாததாக இருக்கும்!
தெரியாத விஷயங்களை பேசாதீர்கள்! புரியாததை புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள்! தற்பெருமையை தானாக ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! எதிலும் முந்திக்கொண்டு செல்லாதீர்கள்! தெரியாததை கேட்க தயங்காதீர்கள்!
சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே!
சந்தர்ப்பங்கள் வரும்போது தடம் மாறாதே!
முயன்று பார்ப்பதில் பிழை ஏதும் இல்லை! வா மீண்டும் ஒருமுறை மட்டும்! முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்! வலிகளும் பழகிபோகும்!
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றிவிட்டால், எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும் உன் விடாமுயற்சியால்!
வாய்ப்பு என்பது ஆகாய விமானம் மாதிரி அனுமதிச்சீட்டை பயன்படுத்தியவேரே - ஆகாயத்தில் பறக்க முடியும். அதிர்ஷ்டம் என எண்ணியவர்களால் ஆகாயத்தை மட்டுமே காணலாம்!
எடுத்த முயற்சியில் தோல்வியடைந்தால் அடுத்த முயற்சியை வெற்றி பெறச் செய்! அதுவே வீரனுக்கு அழகு!
தடைகள் பல வந்தாலும்... தாவிச் சென்று ஓடு...
சோதனை காலத்தை தூக்கி போட்டு விட்டு; சாதனை காலத்தை நோக்கி அடி எடுத்துவை!