No one can stop the success that can be achieved!
Self trust articlesImage credit - pixabay

தன்னம்பிக்கை - விடாமுயற்சி சேரும்போது வெற்றி நிச்சயம்!

Published on

வாழ்க்கையின் ஒட்டு மொத்த, வெற்றியும்  தன்னம்பிக்கை  மற்றும் துணிவு இவற்றுடன் விடாமுயற்சியும்  இருபபதால்தான் ஏற்படுகிறது. விடாமுயற்சியின் காரணமாகவே வெற்றிக்குத் தேவையான திறன்களை  கற்றுக் கொள்கிறோம். வளங்களை மேலாண்மை செய்கிறோம்.‌ உடல் திறனுடன், மனத்திறனும்  அதிகரிக்க உழைக்கிறோம். இதனால் வெற்றி மிக அருகில் வருகிறது.

வெற்றி பெற்றவர்கள் குறித்து சிந்திக்கும்போது அவர்கள் ஏதோ தனித்தன்மை  பெற்றவர்களாக  நமக்கு எண்ணம் ஏற்படும். உண்மையில் அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்பது  அவர்களின் விடாமுயற்சியாலேயே… சுய உந்துதலோ, மற்றவர்களின் வழிகாட்டுதலோ, வேறு வழி இல்லாத காரணத்தால் , சாதிக்க வேண்டும் என்ற உறுதியான, வெற்றியை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறோம். இப்பயணம் இலக்கைச் சென்று அடைய வேண்டுமென்றால், விடாமுயற்சியும் கூடவே பயணிக்க வேண்டும். 

நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். விவேகமாக செயல்படலாம்.  ஆனால் நம் பயணம் சில சமயம் முன்னோக்கி நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டு இருக்கும். முன்னேறாமல் இருக்கும் இடத்திலேயே நின்றால், மற்றவர்கள் முன் சென்றுவிடுவர். முதல் முயற்சி பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. இருக்கும திறமைகளும்  விடாமுயற்சியும் சேரும் போதுதான் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சிரமங்கள் ஏற்படும்போதும், வெற்றி தாமதமாகும் போதும் விடாமுயற்சி உதவுகிறது. 

வாழ்க்கை எப்போதும் இனிப்பதில்லை. நாட்கள் நகர்வது கடினமாக இருக்கும்.‌ தினம் தினம் போராட்டங்களை சந்திக்க வேண்டி அதை மிகவும் சோதிக்கும். இத்தகைய கடுமையான சூழலிலும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.‌ சில சமயம் முயற்சியைத் தள்ளி வைக்கவே மனம் கூறும். இத்தகைய நேரத்திலும்  நமது வெற்றிக்காக தொடர்ந்து முயற்சி செய்வதுதான் விடாமுயற்சி இருக்கும். நிலைமை சீரடைவதுபோல் கூட தோன்றாது‌ அத்தகைய நேரத்திலும்  நமது வெற்றிக்காக தொடர்ந்து முயற்சி செய்வதுதான் விடாமுயற்சி. 

எந்தச் செயலையும் சாதிக்க வேண்டும் என தீர்மானித்துக் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டாலும் வெற்றி கிட்டும்வரை நமது முயற்சிகளைத் தொடர வேண்டும். நம் நம்பிக்கை, நோக்கம், தீர்மானம் எல்லாம் நம்முடன் பயணிக்கும் நண்பர்கள்.  நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். இலட்சியக் கனவு மனதைவிட்டு அகலாமல் தீப்பந்தம்போல்  எண்ணங்களையும், செயல்களையும் ஒளிரச் செய்ய வேண்டும். எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மையும், நேர்மையும் உள்ளபோது  நம் முயற்சி வெற்றி பெற்றுத்தான் ஆகவேண்டும். உறுதியான தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் சேரும்போது, பெறக்கூடிய நமது இறுதி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

logo
Kalki Online
kalkionline.com