
வாழ்வில் நீங்கள் எதை சாதிக்க முயற்சித்தாலும் சரி, உங்கள் இலக்கும், நீங்கள் நம்புகின்ற விஷயங்களும் சாத்தியம்தான் என்று நம்புகின்ற மக்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஒரு சிகிச்சை மையம் வைத்திருப்பவர் வருபவர்களுக்கு நம்பிக்கையோடு சிகிச்சை அளிப்பது இன்றியமையாதது. சிகிச்சை பெற வருபவர்களுக்கு மனப்போக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு சிகிச்சை அளிக்கிறவருக்கும் நல்ல மனப்போக்கு தேவை. ஒருவரை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாத சிகிச்சையாளர்கள், நோயாளி குணமாவதைப் பற்றிப் பேசமாட்டார்கள்.
அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அவர்கள் எந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்களோ, அவர்கள் குணமடைவது சாத்தியமில்லை என்ற நஞ்சை அவர்கள் மனங்களில் கலந்துவிடுகிறார்கள். இது தங்களைத்தானே அழித்துக் கொள்ளுகிற ஒரு மனப்போக்கை நோயாளிகளிடம் உருவாக்கிவிடுகிறது.
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். குணமடையும் நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள் என்று மருத்துவர்கள் கூறினால், உங்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சையில் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்பீர்களா?. ஒருவர் ஒருமுறை ஒரு பொருளுக்கு அடிமையாகிவிட்டால் அவரை அதிலிருந்து ஒருபோதும் மீட்கவே முடியாது என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ள உளவியலாளர்கள், மனநல மருத்துவர்களும் உங்களைச் சூழ்ந்திருந்தால் அவர்கள் கொடுக்கின்ற சிகிச்சைகளுக்கு உங்கள் உடலும் மனமும் எப்படி செயல்விடை அளிக்கும்?.
ஆனால் தங்கள் நோயாளிகளால் குணமடைய முடியும் என்று நம்புகின்ற மருத்துவர்களும், சிகிச்சையாளர்களும. அவர்களை குணப்படுத்துவதற்கான வழிகளை தேடுவர். நேர்மறையான நம்பிக்கையை நோயாளிகளிடம் விதைப்பர். சில சிகிச்சை மையங்களில் நோயாளிகள் பரிபூரணமான பலமடைவது போன்ற காட்சியை அவர்கள் மனதில் பதிய வைப்பர்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தில் வெற்றி பெறுவதற்கு இந்த நேர்மறையான நம்பிக்கை உதவும். உங்களுடைய இலக்குகள் மீதும் வாழ்க்கை குறித்து நீங்கள் கொண்டுள்ள நேர்மறையான கண்ணோட்டத்தில் மீது, நம்பிக்கையில்லாத மக்கள் உங்களைத் தொடர்ந்து ஊக்கமிழக்கச் செய்து கொண்டே இருந்தால் உங்கள் வெற்றி தடைபடும்.
எனவே உங்கள் மகிழ்ச்சியைத் தக்க வைக்க உங்கள் இலக்குகள் கண்ணோட்டத்தை நம்புகிற மக்களாக உங்களைச் சூழ்ந்து இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.