வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்குங்கள்!

Create an opportunity ...
Image credit - pixabay
Published on

செக்கோஸ்லோவாகியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்து பேரும் புகழும் பெற்ற மஸாரின், ஒரு மாட்டு வண்டி ஒட்டியின் மகன்.

திருமணத்திற்கு முன் மஸாரின் அன்னை வியன்னாவில் ஒரு பணக்கார வீட்டில் வேலைக்காரியாக இருந்தாள்.  அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் நன்கு படித்து உயர்ந்த பதவியில் இருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததிலிருந்து மஸாரின் அன்னை தனக்கு திருமணம் ஆகிப் பிள்ளை பிறந்தால் அவனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று மனதில் தீர்மானித்துக் கொண்டாள். 

பணக்காரன் யாருமே அவளை மணக்க முன்  வரவில்லை. ஒரு வண்டியோட்டிதான் அவளை மணந்தான்.

அவன் ஆஸ்திரியா நாட்டு மன்னரின் வண்டியை ஓட்டுபவன். ஆகவே மனனர் சென்ற இடமெல்லாம் இவளும் கணவனுடன் செல்ல வேண்டியதாக  இருந்தது. மன்னர் வேட்டையாடுவதற்கு ஒரு காட்டு பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது மஸாரின் பிறந்தான்.

அந்தக் காலத்தில் பணக்காரர்கள் படித்தார்களே தவிர ஏழைகளுக்குப் படிப்பு அவசியம் என்று கருதப் படவில்லை. ஆகவே அவர்களுக்கென்று பள்ளிக்கூடம் கிடையாது. எப்படியும் மஸாரினைப் படிக்க வைத்துவிட  வேண்டும் என்று விரும்பினாள்.

திடீரென்று மஸாரின் அன்னைக்கு ஒரு யோசனை தோன்றியது. அரசருக்கு விண்ணப்பம் எழுதினாள். அதில் தன் மகன் படிக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுவதாகவும், அதற்கு அரசர் உதவி செய்ய வேண்டும் என்றும் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய 12 விஷயங்கள்!
Create an opportunity ...

அரசர் விண்ணப்பத்தைப் படித்ததும், ஒரு தாய் தன் மகன் மீது கொண்டிருக்கும் அன்பைப் பாராட்டினார். அதன் காரணமாக மஸாரின் படிக்க உதவி செய்தார். மஸாரினும் விடாமல் தொடர்ந்து இரவும் பகலும் படித்து முன்னேறினார். பட்டம் பெற்றதும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று செக்கோஸ்லோவாகியாவின் ஜனாதிபதியானார்.

படித்துவிட்டு முயற்சி செய்தால் நிச்சயமாக  முன்னேற முடியும். ஆசையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  அமைதியாக இருந்து விடாமல் வாய்ப்புகளை தானாகவே உருவாக்கிக் கொண்டு, ஒரே நோக்கத்துடன் முழுமூச்சில் உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதற்கு  செக்கோஸ்லோவாகியாவின் முதல் ஜனாதிபதி உதாரணமாக உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com