ஆழ்ந்த நம்பிக்கையே வெற்றியைத் தேடித் தரும்!

motivation Image
motivation Imagepixaay.com

ம் மனதின் ஆற்றல் நமக்குத் தெரியுமா? என்று கேட்டால் பலருக்கு தெரியாது என்றுதான் சொல்வார்கள் ஆனால் நம் மனதின் ஆற்றல் மிகப்பெரிய சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அவர்கள் மன ஆற்றலை உணர்ந்தவர்கள்தான் அதனால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது அதற்கு ஒரு சின்ன உதாரணம் இந்த பதிவு.

அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. 

ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.

பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். 

ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். 

திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.

அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.

ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.

உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.

அச்சமயத்தில் கொலம்பஸ் ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. 

இதையும் படியுங்கள்:
அற்புதமான சுவையில் ஆலு மட்டார் செய்யலாம் வாங்க! 
motivation Image

அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது. தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.

கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவரின் பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.

மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம்.

வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.

ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..

நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.

உறுதியாய் நம்புங்கள். உங்கள் கனவெல்லாம் பலிக்கும்., வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com