தனிமை எனும் உலகம்… இதைப் புரிந்துகொள்வது நலம்!

Loneliness and solitude
Loneliness and solitude
Published on

மனிதர்கள் என்னதான் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தாலும் தங்களுக்கென்று ஒரு தனிமையான சூழலில் நேரத்தைச் செலவழிக்க விரும்புவார்கள். அதிலும் சிலர் தங்கள் அதிகமான நேரத்தை தனிமைக்கே ஒதுக்கிக்கொள்வார்கள். மற்றவர்கள் இதிலிருந்து வேறுபட்டு கம்மியான  நேரத்தை ஒதுக்கினால் போதும் என்று கருதுவார்கள். அப்படி என்ன பண்புகள் இந்தத் தனிமையிடம் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.    

உங்களை கவனித்துக்கொள்ள ஊக்குவிக்கும்:

பொதுவாக தனிமையை Solitude மற்றும் Loneliness என்று இரண்டு வகைப்படுத்துவார்கள். அதில் solitude சற்று எல்லாருக்கும் பொருந்தும் ஒன்றாக இருக்கும். Solitude விரும்புவர்கள் எல்லோரிடமும் சகஜமாக பழகுவதுபோல் இருப்பார்கள். அதே நேரம் தங்களென்று நேரம் ஒதுக்கவும் மறக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

  • முக்கியமாக, இவர்கள் அதிக படைப்பாற்றல் மிக்கவர்களாக 
    இருப்பார்கள் ஆகையால் இவர்கள் சிந்திக்கும் விதத்தில் சற்று தனித்திருப்பார்கள்.

  • தங்களின் பொழுதுபோக்கில் எந்தவித சமரசமும் இல்லாமல் யாருக்காகவும் நேரத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள், இதனால் இவர்களின் பலம், பலவீனம் பற்றி ஒரு புரிதல் உண்டாகி எதிலும் தன்னிச்சையாக முடிவெடுப்பவராக இருப்பார்கள்.

  • எந்த ஒரு இடையூறு இல்லாததால் இவர்களுக்கு ஓய்வு எடுக்கும் நேரம் அதிகம் கிடைக்கும். இதை தங்களுக்கான ஆற்றலை recharge செய்யும் யுத்தியாக பயன்படுத்திக்கொள்வார்கள். 

  • எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் எல்லாம் இப்படி ஒரு சூழ்நிலையைத்தான் அதிகம் விரும்புவார்கள்.

இதையும் படியுங்கள்:
'இல்லை' என்ற சொல் எதிர்மறை அலைகளை உருவாக்குமா?
Loneliness and solitude

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான்:

Loneliness இல் இருப்பவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் இந்தச் சமூகத்தை விட்டு சற்று ஒதுங்கி இருக்கத்தான் விரும்புவார்கள். அதற்கு காரணம் பலவாயினும் அவர்களுக்கு இறுதியில் தனிமையே பிடித்துப்போகும் அளவிற்கு இதுதான் நமக்கு தகுந்த சூழ்நிலை என்று நம்பத்தொடங்குவார்கள். இதனால் நாளைடைவில் அவர்களுக்குப் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

  • குறிப்பாக அவர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படும். எதிலும் ஒரு தவறான புரிதல், யாரைக் கண்டாலும் ஒரு பதற்றம். இறுதியில் அது ஏதோ ஒரு வகையில் அவர்களது உடல் நலத்தைப் பாதித்துவிடும்.

  • எதைத் தொட்டாலும் ஒரு பதற்றம் அதிகமான stress என்று நம்மை நாமே காயப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

  • முக்கியமாக நம் வாழ்க்கையின் முன்னேற்றம் முற்றிலும்
    தடைப்பட்டுவிடும். பின்பு எல்லாமே slow process ஆக மாறிவிடும்.

ஆகவே இப்படிப்பட்ட தனிமையான சூழ்நிலையை முழுவதுமாக விரும்புவர்களைக் கண்டாலே அவர்களை அதில் இருந்து வெளிக்கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அல்லது தக்க மனநல மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்று, அவர்களை ஒரு சகஜமான வாழ்க்கை முறைக்கு அழைத்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com