பேரிடர் சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடம்!

சிவபெருமானின் சிலை...
சிவபெருமானின் சிலை...

த்திரகாண்டில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாராலும் மறக்க முடியாது. இதுவரை அப்படி ஒரு வெள்ளப்பெருக்கை பார்த்ததில்லை என்று சொல்லுமளவிற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றது.

அது ஒரு துன்பமான சம்பவமாக இருந்தாலும், அந்த நிகழ்வு சொல்லிக்கொடுத்த வாழ்க்கைப் பாடமோ ஏராளம்.

அதிலிருந்து என்ன வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொண்டேன் என்று கேட்கிறீர்களா?

ரிஷிகேஷில் உள்ள சிவபெருமானின் சிலை 14 அடி உயரம் கொண்டது. கேதர்நாத் வெள்ளப்பெருக்கில் ரிஷிகேஷூம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்த சிவபெருமானின் சிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த விஷயம் பலரை ஆச்சர்யப்படுத்தியது. அந்த சிலையின் கழுத்தளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. இருப்பினும் அந்தச் சிலை அசைந்து கொடுக்கவில்லை.  தன்னைச் சுற்றி பெரிய வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டிருக்கும்போதும், சிவபெருமான் அமைதியாக அமர்ந்து தவம் செய்வது போன்று மிகவும் அழகாக காட்சியளித்தது.

இதை பார்க்கும்போது, நாமும் நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை இதைபோன்று கையாள வேண்டும் என்று தோன்றியது.

இப்போது இதை ஒரு உவமையாக யோசித்து பாருங்களேன். அதாவது சிவபெருமானின் சிலைதான் நாம். அவரை சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்குத்தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்ட துன்பங்கள்.

இதையும் படியுங்கள்:
நூக்கல் காயில் இத்தனை நன்மைகளா?
சிவபெருமானின் சிலை...

கஷ்ட நஷ்டங்களை தன்னுள் உள்வாங்கிக்கொண்ட மற்ற கட்டடங்களோ இடிந்து இருந்த இடம் தெரியாமல் போயின.

ஆனால், சிவபெருமானின் சிலையோ புன்னகைத்த முகத்துடன் காட்சியளித்தது. அதுபோலதான் நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை நாம் உள்வாங்கிக் கொள்ளும்போது அது நமக்கு அதிக துன்பத்தைத் தரும். இதுவே நடப்பது நடக்கத்தான் போகிறது. அதை நினைத்து கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது என்ற எண்ணம் வந்துவிட்டால் எந்த பிரச்னைகளும், எண்ணங்களும் நம்மை ஊடுருவி போய் மனதில் தொல்லை தராது. நம்முள் எந்த கெட்ட எண்ணங்களையும் ஊடுருவ விடாமல் இருக்கும்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com