மனிதர்களுள் பாகுபாடு பார்ப்பது மிகப்பெரிய பாவம்!

It is a great sin to discriminate between people!
Diffrent peoplesImage credit - pixabay
Published on

னிதர்களை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டியது மிக அவசியம். ஜாதி, மதம், பேதம் ஆகியவற்றைத் தாண்டி மனிதத்துவத்திற்கே மதிப்பதிகமாகும். கடவுளும் யாரிடமும் பேதம் பார்க்க வேண்டும் என்று போதிக்கவில்லை. எனவே, மனிதர்களுள் பாகுபாடு பார்ப்பது மிகப் பெரிய பாவமாகும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

ஒருமுறை கிருஷ்ணர் உதங்க முனிவரிடம், ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்கிறார். அதற்கு முனிவரோ அதை மறுத்து விடுகிறார். இருந்தும் கிருஷ்ணர் முனிவரை வற்புறுத்துகிறார்.

இப்போது முனிவர் சொல்கிறார், ‘நான் எங்கும் சுற்றிக் கொண்டிருப்பவன். அதனால் அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும். அச்சமயத்தில் எனக்கு தண்ணீர் கிடைக்காது. எனவே, அதற்கு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறுகிறார்.

அதற்கு கிருஷ்ணரும், ‘தாகம் எடுக்கும் பொழுது என்னை நினைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் தண்ணீர் கிடைக்கும். ஆனால், நான் எப்படி தண்ணீர் அனுப்பினாலும், அதை நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்’ என்று கிருஷ்ணர் கூறினார். இதற்கு முனிவரும் சம்மதித்தார்.

பின்பு ஒருநாள் முனிவர் பாலைவனத்தில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த பொழுது கடுமையாக தாகம் எடுக்கவே கிருஷ்ணரை நினைத்தார். கிருஷ்ணரும் புலையர் வேடத்தில் தேவேந்திரனிடம் தேவாமிர்தத்தைக் கொடுத்து விட்டார். அதில் அருவெறுப்படைந்த முனிவர் தேவேந்திரனை விரட்டிவிடுகிறார்.

பின்பு ஒருநாள் முனிவரை கிருஷ்ணர் சந்திக்கிறார். அப்போது கிருஷ்ணர் கேட்கிறார், ‘என்ன முனிவரே! தேவேந்திரனிடம் தேவாமிர்தத்தை கொடுத்து அனுப்பினால், அதை நிராகரித்து விட்டீர்களே!' என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவருக்கு பெரும் அதிர்ச்சி. உயிர்களிடத்தில் உயர்வு, தாழ்வு, பேதம் பார்த்த தன் தவறை அப்போதுதான் உணர்கிறார்.

இதையும் படியுங்கள்:
சூழ்நிலையை வைத்து ஒருவரின் குணத்தை எடை போடக்கூடாது. ஏன் தெரியுமா?
It is a great sin to discriminate between people!

இந்தக் கதையில் வந்ததுப்போலத்தான். கடவுள் ஒன்றும் ஜாதி, மதபேதத்தை உருவாக்கவில்லை. மனிதனே அதை உருவாக்கி, மனிதனே உயிர்களிடத்தில் உயர்வு, தாழ்வு பார்க்கிறான். எல்லா உயிர்களையும் சமமாகவும், அன்பாகவும் நடத்த வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமுமாகும். அதை உணர்ந்துக் கொண்டு எல்லா உயிரையும் மதித்து, சரிசமமாக நினைக்க வேண்டியது அவசியமாகும். இதைத் தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com