

அவரவருக்கு ஒரு ஆசை, கனவு என அனைத்துமே இருக்கும். அதேபோல் மறுபுறம் கடமை என்பதும் நிச்சயம் இருக்கும். வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கடமை இருக்கிறதல்லவா? இது ஒருவனை மற்றவர்களுக்காக மட்டுமே வாழ வைக்கும். தன்னை முழுவதுமாக மறக்க வைத்துவிடும். ஒருநாள் முதுமையின்போது திரும்பிப் பார்க்கையில் நினைத்து ஒரு புன்னகைச் செய்யக்கூட ஒரு நிகழ்வும் இருக்காது.
ஒருவன் தன் வாழ்நாளில் பிறந்தபோது அம்மாவின் மடியில் இருக்கிறான். பின் பள்ளி சுவற்றுக்குள். அதன்பின் கல்லூரி,வேலை, கல்யாணம், பிள்ளைகள். அவர்களை வளர்த்து ஆளாக்கி முடிக்கும்போது நமக்கு முதுமையே தட்டிவிடும். ஆகையால் இந்த முறையான வாழ்க்கைக்கு நடுவில் 30 வயதுக்கு முன்னதாக இந்த விஷயங்களைக் கட்டாயம் செய்துவிடுங்கள்.
நாடுகளுக்குப் பயணம் செல்லுங்கள்:
நீங்கள் பிறந்த நாட்டில் மட்டுமே இருந்துக்கொண்டு உலகத்தைப் பார்க்கத் தவறிவிடாதீர்கள். ஒருவனால் முழு உலகத்தையும் பார்த்துவிட முடியாது. ஆனால் உங்களுக்குப் பிடித்த சில இடங்களுக்கு மட்டும் சென்று அனுபவிக்கலாம்.
சஃபாரி:
நம்மைப் போல் எத்தனையோ உயிரினங்கள் இவ்வுலகில் உள்ளன. இவையனைத்தும் ஒவ்வொரு அழகைக் கொண்டவை. இயற்கையையும் தாவரங்களையும் விலங்குகளையும் முடிந்த அளவுப் பார்த்துவிடுங்கள்.
தற்காப்பு கலை கற்றுக்கொள்ளுங்கள்:
ஒருமுறை இந்த கலையை கற்றுக்கொண்டால் போதும் வாழ்நாள் முழுவதும் நாம் எங்கு வேண்டுமென்றாலும் தனியாகச் செல்லலாம். என்ன பிரச்சனைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கலாம். யாரையும் சார்ந்து நிற்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
பிடித்தப் பொருட்களை வாங்கிவிடுங்கள்:
சிறு வயதில் சில பொருட்கள் வாங்க ஆசையாக இருக்கும். ஆனால் சில சூழ்நிலைகளால் நாம் அதனை வாங்க முடியாமல் இருந்திருப்போம். அந்த பொருட்கள் மற்றும் இப்போது நீங்கள் ஆசைப்படும் பொருட்கள் அனைத்தையும் நீங்கள் வாங்கிவிடுங்கள். அது அலங்காரப் பொருட்களாக இருந்தாலும் சரி உபயோகப் பொருட்களாக இருந்தாலும் சரி.
பைகள் வாங்கிவிடுங்கள்:
வெளியே செல்லும்போதும் வேலைக்குச் செல்லும்போதும் நம்முடைய உடமைகளை வைத்துக்கொள்ள உதவும் இந்த பைகள் அத்தியாவசியமான ஒன்று. நம்மைக் காத்துக்கொள்ள உதவும் பொருட்களிலிருந்து நாம் பயன்படுத்தும் அத்தியாவசியமானப் பொருட்கள் வரை அந்த பையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் 10 பைகளாவது 30 வயதிற்கு முன் வாங்கிவைத்து வாழ்க்கை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மன அமைதியை பாதுகாக்க கற்றுக்கொளுங்கள்:
சில நேரங்களில் உங்களது மன அமைதி மோசமாகி விட்டாலும், அதனை எப்படி சரிசெய்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கையுடன் பேசுங்கள்:
பொது இடங்களில் தன்னம்பிக்கையுடன் பேசிப் பழகுகங்கள். இவை உங்கள் மேல் மற்றவர்களுக்கு ஒரு மரியாதையை கொடுக்கும். அந்த மரியாதையே உங்களிடம் அவர் நடந்துக்கொள்ளும் விதத்தை முடிவு செய்யும்.