
நம் எல்லோருடைய வாழ்க்கையையும், நம்பிக்கை எனும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டே இருக்கிறோம். நாம் ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
நம்பிக்கையின்மை வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகும். எப்போதும் நாம் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது.
தச்சுத்தொழில் செய்து வந்த ஏழை தன் குறைந்த வருமானத்தில் தன் மனைவி, இரண்டு பிள்ளைகளும் பசியாறுவதற்கே கஷ்டப்பட்டனர்.
ஒரு நாள் தெருவில் நடந்தபோது பழங்கால நாணயம் ஒன்று கிடைத்தது. அந்த நாணயத்தின் நடுவில் ஒரு ஓட்டை இருந்தது.
இப்படிப்பட்ட ஓட்டை நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்று அவனது நண்பரான ஜோசியர் கூறியிருந்தார்.
அவன், இனி அதிர்ஷ்டம் என்னைத் தேடிவரும் நான் பணக்காரனாகி விடுவேன் என்று நினைத்து, அதை தன் பாக்கெட்டில் வைத்தான்.
அடுத்த நாளில் இருந்து அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் இந்த நாணயம் கிடைத்த நேரம் என நம்பினான்.
அதை ஒரு பட்டுத்துணியால் மூடி வைத்து மூடி பட்டறை கருவிகளோடு வைத்தான். தினமும் அதை தொட்டு கும்பிட்டு தொழிலுக்கு கிளம்புவான். சில மாதங்களில் அவன் வருமானம் பெருகியது. பெரிய கடை திறந்து பணியாளர் பலரை நியமித்தான். சில ஆண்டுகளில் நகரிலேயே பெரிய சம்பாதிக்கும் தொழிலதிபரானான்.
பல ஆண்டுகள் கழித்து தன் பேரக்குழந்தைகளிடம் தனது வாழ்க்கை பற்றி பேசினான்.
அப்போது மனைவியிடம் அந்த பட்டுத் துணியில் உள்ள காசை கொண்டு வரச்சொல்லி எடுத்து பார்த்தபோது, அதில் ஓட்டை நாணயம் இல்லாமல் வேறு காசு இருந்ததைக்கேட்டான்.
மனைவி, உடனே அந்த காசு இருந்த பையை துவைக்க உதறிய போது எங்கோ விழுந்துவிட்டது. அதான் வேறு காசு வைத்தேன்.
இது எப்போ நடந்தது? எனக் கேட்டான்.
மனைவி, இது காசு வந்து ஒரு வாரத்தில் நடந்தது என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்து, 'உண்மையில் அதிர்ஷ்டம் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. தன்னுடைய, 'நம்பிக்கைதான்' என உணர்ந்தான். முன்பை விட உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் தனது பணியை தன் பிள்ளைகளுடன் தொடர்ந்தான்.
நம்பிக்கையே வாழ்க்கை!