இருவழிக்கதவு டெக்னிக் மூலம் எப்படி முடிவுகளை எடுக்கிறார்கள் தெரியுமா?

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

வாழ்க்கையில் முடிவெடுப்பது என்பது ஒரு முக்கியமான அம்சம். Two way door method என்கிற டெக்னிக்கை அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ்  பிரபலப்படுத்தினார். புத்திசாலிகள் இரு வழிக்கதவு முறையை பயன்படுத்தி எப்படி மிக சிறப்பாகவும் விரைவாகவும் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு வழிக் கதவு முறையின்  தீமைகள்;

இந்த முறையில் முடிவுகளை எடுத்த பிறகு மாற்றுவது கடினமானது மற்றும் சாத்தியமில்லாத ஒன்று.  ஒரு வழிக் கதவு வழியாக சென்றவுடன் அந்த கதவு சாத்தப்பட்டால் மீண்டும் வந்த பாதைக்கு திரும்புவது சாத்தியம் இல்லை. இந்த மாதிரி முடிவுகள்  நேரம், முயற்சி பணம் மற்றும் வளத்தை பாதிக்கும்.

இருவழிக் கதவு முறை முறையின் நன்மைகள்;

இந்த முறையில் எதிர்பார்த்தபடி ஒரு செயல் நடைபெறவில்லை என்றால் அதை எளிதாக மாற்றலாம். கதவைத் திறந்து செல்லும் போது  மனதை மாற்றிக் கொண்டு பின்வாங்கி வந்த வழியே திரும்பி செல்வது போல ஆகும். குறைந்த அளவு ரிஸ்க் கொண்டவை. எளிதாக இதிலிருந்து மீண்டு விடலாம்.

இருவழிக் கதவு முறையை பயன்படுத்துவது எப்படி?

தெளிவான முடிவு;

எடுக்கப்போகும் முடிவைப் பற்றிய தெளிந்த ஆழமான தீர்மானம் வேண்டும். அதனுடைய அத்தனை சாரம்சத்தையும் புரிந்து கொள்ள ஏதுவாக  இருக்க வேண்டும்.

மாற்று முடிவுகள்

தான் எடுத்திருக்கும் முடிவுகள் எளிதில் மாற்றக்கூடியதா என்பதை கவனிக்கவும். அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை சரிப்படுத்திக் கொள்ளலாம் அல்லது அந்த முடிவையே மாற்றிக் கொண்டு வேறு ஒரு முடிவை எடுக்கலாம் என்பது போல இருக்க வேண்டும்.

விளைவுகள்

ஒருவர் தன் திருமண வாழ்க்கை, தொழில், அல்லது தான் பணிபுரியும் வேலையைப் பற்றி முடிவு எடுக்கும்போது அது தன்னுடைய நேரம், பொருளாதாரம், வாழ்வை அது எந்த விதத்திலாவது பாதிக்குமா,  குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை யோசிக்க வேண்டும்

எல்லைகளை அமைக்கவும்:

தான் எடுத்திருக்கும் முடிவுக்கான எல்லைகளை அமைக்க வேண்டும்.  குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த முடிவு வேலை செய்யவில்லை என்றால் அதை மாற்றலாம் என்பது போல அந்த முடிவு இருக்க வேண்டும்.

பரிசோதனை செய்தல்

தான் எடுத்திருக்கும் முடிவு நன்றாக பயனளிக்க கூடியதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை முயற்சிகளில்  இறங்கலாம். அதை பற்றி நிறைய தகவல்களை சேகரித்துக் கொள்ளலாம். அனுபவ சாலிகளிடம் கேட்டு அறிவுரை பெறலாம். இப்படி இருக்கும் போது எடுக்கப் போகும் முடிவு சரியான விதத்தில் அமைய வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
தென்கொரிய பெண்கள் பயன்படுத்தும் 5 அழகுசாதனக் கருவிகள் (beauty tools) என்னென்ன தெரியுமா?
Motivation Image

தாமதமின்றி முடிவெடுக்கவும்;

சேகரித்த தகவல்கள் மற்றும் விவரங்களின் அடிப்படையில், மாற்றக்கூடிய அளவில் முடிவுகள் இருக்கும் பட்சத்தில் அதைப்பற்றி யோசித்து குழப்பிக் கொள்ளாமல் உடனே முடிவெடுத்து விடுவது நலம்.

புதிய முடிவு;

முடிவுகளை எடுத்த பின்பு அதை நெருக்கமாக அப்சர்வ் செய்யவும். எதிர்பார்த்ததுபோல முடிவுகள் அமையவில்லை என்றால் தயங்காமல் அதை மறுபரிசீலனை செய்து புதிய முடிவு ஒன்று எடுக்க வேண்டும்.

அனுபவப்பாடம்;

எடுத்த முடிவுகளில் எது நன்றாக ஒர்க் அவுட் ஆனது? எது சரியாக வேலை செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்டு,  இந்த இரண்டிலிருந்தும் எதை செய்யலாம், அடுத்து எதை செய்யக்கூடாது என்கிற பாடத்தை கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் அதை செயல்படுத்தலாம்.

இருவழிக் கதவு முறையை பயன்படுத்தி ஒருவரால் மிக விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் முடிவுகளை எடுக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com