நாம் செய்த தவறை சரிசெய்வது எப்படி?

How to correct a mistake?
Lifestyle articles
Published on

ம் வாழ்க்கையில் தினமும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம். அவ்வாறு நாம் தெரியாமல் செய்துவிடும் சில தவறுகளை எப்படி சரிசெய்வது என்று என்றாவது யோசித்ததுண்டா? நாம் செய்த தவறை சரிசெய்ய அதைவிட பெரிய நன்மையை செய்துவிட வேண்டும். இதை சரியாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் மிகபெரிய செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் மாம்பழம் மீது இருந்த ஆசையால், தன் பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தை திருடிவிட்டார். இந்த செய்தி காட்டுத்தீ போல அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் பரவியது. அதிலிருந்து அனைவரும் அவரை ‘மாம்பழத் திருடன்’ என்று அழைத்தனர். காலப்போக்கில் அவரின் வீட்டின் பெயரும் ‘மாம்பழத் திருடன் வீடு’ என்று மாறிவிட்டது. பல தலைமுறைகள் கழிந்தும் அந்த பெயர் மட்டும் மாறவேயில்லை.

இப்போது அந்த வீட்டில் அவரின் பேரன் ரோஹித் வாழ்ந்து வருகிறான். அவனின் காதுபடவே பலர் விலாசம் சொல்வதற்கு ‘மாம்பழத் திருடன்’ என்ற பெயரை அடைமொழியாகப் பயன்படுத்தினர். இதைக்கேட்ட ரோஹித்திற்கு, ‘எப்போதோ தாத்தா செய்த தவறுக்கு இன்னும் நாம் ஏன் திருடன் பட்டத்தை சுமக்க வேண்டும்?’ என்று தோன்றியது. இதனால் அந்த ஊரில் உள்ள பெரியவரிடம் சென்று அறிவுரைக் கேட்டான் ரோஹித்.

நடந்தவற்றை அவரிடம் சொல்லி, 'ஐயா! இந்த தவறை சரிசெய்ய என்ன வழி?’ என்று கேட்டான் ரோஹித். அதற்கு அந்த பெரியவர், ‘தினமும் உன் வீட்டில் அன்னதானம் செய்!’ என்று கூறினார். இதைக்கேட்ட ரோஹித் தினமும் தன் வீட்டில் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். இப்படியே போக ஒருநாள் ரோஹித் காதுபடவே, ‘அந்த அன்னதானம் போடும் வீட்டிலிருந்து நான்காவது வீடு’ என்று ஒருவர் விலாசம் சொன்னார். அதைக்கேட்டு ரோஹித் மிகவும் மகிழ்ந்தான்.

இதையும் படியுங்கள்:
அடுத்தவர் குணம் தெரியாமல் உதவி செய்பவரா நீங்க? இந்தக்கதை உங்களுக்குத்தான்!
How to correct a mistake?

இந்தக் கதையில் சொன்னதுபோல, தவறை செய்து மறைப்பதை விட நல்லதை செய்தால் செய்த தவறுக்கூட தானாகவே மறைந்துவிடும் என்பதே அர்த்தம். இதை தெளிவாகப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com