தன்மதிப்பு - தன்னம்பிக்கை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

Motivation article
Motivation article
Published on

ன் மதிப்பு, தன்னம்பிக்கை இரண்டுமே ஒருவரது எண்ண ஓட்டத்தை தானே குறிக்கிறது. இதில் என்ன வேறுபாடு இருந்து விடப்போகிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்? மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் எண்ணத்தோன்றும்.

என்னைப் பற்றி நான் உயர்வான கருத்துக்களை கொண்டிருப்பதைத்தானே இரண்டு சொற்களுமே குறிக்கின்றன என்று எண்ணுவீர்கள். அப்படி இல்லை. இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தன் மதிப்பு கண்டிப்பாக இருக்கும். இது இல்லாமல் இருக்கக்கூடியவர்களை பார்க்க முடியாது. உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு விமர்சிப்பது போன்றது இது. இதிலும் மிகைப்படுத்துதல் இருக்கலாம். ஆனால் தன் மதிப்பு என்பது பிறவி குணம் இல்லை. உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்வது வளர்த்துக் கொள்வது.

இதற்கு உங்கள் பெற்றோர் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் காரணமாக அமையலாம். உங்கள் நண்பர்களால் இது விளையலாம். உறவினர்களால் ஏற்படலாம். இது வாழும் சூழலை வைத்து வருவது. ஆனால் தன்னம்பிக்கை என்பது அப்படி அல்ல.

தன்னம்பிக்கை என்பது பணத்தைப் போன்றது. நீங்களே முயற்சி செய்து இதைத் தேடிக்கொள்ளலாம். உங்களிடத்தில் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளலாம். இதை தேடிச் சேர்ப்பதற்கு அடிப்படை தேவை என்ன என்று பார்த்தீர்கள் என்றால் அதுதான் தன் மதிப்பு என்பது தெளிவாக விளங்கும். ஆகவே உங்களிடம் தன்மதிப்பு இருக்குமானால் நீங்கள் உங்களிடம் இல்லாத தன்னம்பிக்கையை நிச்சயமாக பெறமுடியும். ஏற்கனவே ஓரளவுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது என்றால் அதை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளவும் முடியும்.

இதையும் படியுங்கள்:
வெற்றியாளர் ஆண்ட்ரூ கார்னகி கடைபிடித்த 10 விதிகள் மற்றும் அவரது கொடைகள்!
Motivation article

நாம் சாதிக்க விரும்புவது எல்லாமே நமது ஆசைகள், விருப்பங்கள், நோக்கங்கள். இவற்றை மனதில் உருவாக்குவதற்கு தன் மதிப்பு அவசியம். அதன் மேல் தன்நம்பிக்கை என்ற அடித்தளத்தை எழுப்ப வேண்டும். அந்த வலுவான அடித்தளத்தின் மேல் உங்கள் சாதனை என்ற மாளிகை எழவேண்டும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நான் ஆசைப்பட்டது அத்தனையுமே இந்நேரம் கை கூடி இருக்க வேண்டுமே! ஆனால் இதில் ஒன்றும கூட நடக்கவில்லையே என்பீர்கள்! ஏன் அப்படி நடக்காமல் போனது என்பதை தெரிந்து கொண்டீர்களா? இதுநாள் வரை நீங்கள் கடந்த காலத்தையே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்திருப்பீர்கள்.

எதிர்காலம் உங்களுக்கு எதையெதையோ அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பதை பற்றி கண்டு கொள்ளாமலேயே கடந்த காலத்தை பற்றிய சதா எண்ணி எண்ணி குமைந்து கொண்டிருந்திருப்பீர்கள். இனிமேல் அப்படி நினைப்பதை ஒழியுங்கள். போனதெல்லாம் போகட்டும் இனிமேல் எல்லாமே வெற்றிதான் என்று நினையுங்கள். அப்படி நீங்கள் நினைப்பதன் மூலமே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வரலாம் எதுவும் உங்கள் நினைப்பின் அடிப்படையில் தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com