சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

importance given to the little things
motivation articles
Published on

ம் வாழ்க்கையில் பெரிய இழப்புகளை தவிர்க்க சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘இந்த சிறிய விஷயத்தை செய்ய வேண்டுமா?’ என்று நினைத்து  நாம் காட்டும் அலட்சியம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, சிறியதானாலும் கவனம் தேவை. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் இரண்டு பேர் புதிதாக முட்டைக் கடை திறக்க விரும்பினார்கள். அதை எடுத்து செல்வதற்காக பெரிய பெட்டிகளை இருவருமே வாங்குகிறார்கள். அப்படி வாங்கும்போது அதில் இரண்டாம் நபர் ஒரு பூட்டும் சேர்த்து வாங்கினார். இதை கவனித்த முதலாம் நபர், ‘சந்தையில் முட்டை வாங்கிக்கொண்டு நேராக வீட்டிற்கு கொண்டு செல்ல போகிறோம். இதற்கு எதுக்கு பூட்டு?’ என்று நினைத்தார்.

இப்போது இருவருமே தங்களுக்கு தேவையான முட்டைகளை வாங்கிக் கொண்டு அதை மாட்டு வண்டியில் வைத்துக் கொண்டு தங்கள் கிராமத்திற்கு வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வழியில் தண்ணீர் தாகம் எடுக்கவே மரத்தடியில் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிக்க செல்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்து பார்த்தால், அங்கே நிறைய குரங்குகள் முட்டையை எடுத்து வீசி எல்லாவற்றையும் நாசம் செய்துக் கொண்டிருந்தது.

இரண்டு பேரும் அவசரமாக ஓடி வந்து குரங்குகளை விரட்டி விட்டு மாட்டு வண்டியை பார்த்தனர். அதில் பூட்டு போட்ட பெட்டியில் இருந்த முட்டைகள் பத்திரமாக இருந்தது. அப்போதுதான் அந்த முதலாம் நபருக்கு தான் செய்த தவறு என்னவென்று புரிந்தது. அடுத்தவரை முட்டாள் என்று நினைத்து ஏளனம் செய்ததால், இப்போது பெரிய நஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:
வெற்றியடைய புத்தர் சொன்ன அருமையான போதனை!
importance given to the little things

இந்தக் கதையில் வந்தது போலத்தான். சில நேரங்களிலில் நம் வாழ்வில் பெரிய விஷயங்களை செய்து விட்டு சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய் விடுவோம். அந்த சின்ன விஷயங்கள்தான் நம்மை பல சமயங்களில் பெரிய இழப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும். இதை தெளிவாக புரிந்துக் கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com