இன்று நாம் நொடிக்கு நொடி ஆர்டர் செய்யும் 'Zomato' உருவான கதை தெரியுமா?

Do you know the origin story of 'Zomato' which we order by the minute today?
Do you know the origin story of 'Zomato' which we order by the minute today?Image Credits: Zee News- India.Com
Published on

ன்றைய காலக்கட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஆன்லைன் ஆர்டர் செய்துக்கொண்டிருக்கும். அதில் முக்கியமாக உணவு ஆர்டர் செய்வதே அதிகமாக உள்ளது. மக்கள் வீட்டில் உணவு சமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்ய, அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது உணவு டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள். அதில் மிகவும் பிரபலமாக உள்ள Zomato உருவான கதையைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

IT யில் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒருவர் இன்று மூன்றரை லட்சம் பேருக்கு சம்பளம் கொடுக்கிறார் என்று சொன்னால் நம்புவீங்களா? Deepinder Goyal 2005 ல் படிப்பை முடித்துவிட்டு IT Company க்கு வேலைக்கு போகிறார். அங்கு தினமும் கேண்டீனில் பெரிய லைன் நிற்கும். அதில் நின்று ஆர்டர் செய்துதான் சாப்பிடுகிறார்.

இதனால் நிறைய பேருக்கு நேரம் வீணாகிறது என்று யோசித்தவருக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. கேண்டீனின் மெனுவை ஸ்கேன் செய்து கம்பெனி வெப்சைட்டில் போடுகிறார். இதனால் நிறைய பேர் சுலபமாக ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள்.

இதை ஏன் பெரிய அளவில் செய்யக்கூடாது என்று நினைத்த Deepinder இரண்டே மாதத்தில் Foodiebay என்ற கம்பெனியை ஆரம்பித்து டெல்லியில் உள்ள சில ரெஸ்டாரெண்ட்களுக்கு மட்டுமே தன்னுடைய சேவையை கொடுக்க முடிகிறது.

இவர் எவ்வளவுதான் கடினயாக உழைத்தாலும், ஒரு நாளைக்கு மூன்று பேர்தான் இவர் வெப்சைட்டை திறந்து பார்க்கிறார்கள். இதைப் பார்த்த இவருடைய நண்பர் Pankaj இவருடைய வெப்சைட்டை Google talks ல் அப்லோட் செய்கிறார். ஒரே நாளில் ஆயிரம் பேர் அந்த வைப்ஸைட்டை திறந்துப் பார்க்கிறார்கள். Pankaj வந்த பிறகு 3200 ரெஸ்டாரெண்டிற்கு இவர்களுடைய சேவையை விரிவுப்படுத்துகிறார்கள். மக்கள் சுலபமாக கம்பெனி பெயரை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று ‘Zomato’ என்று மாற்றி 2015 ல் உணவு டெலிவரி செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
யாருடைய கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Do you know the origin story of 'Zomato' which we order by the minute today?

ஒரு பக்கம் நிறைய பேர் வீட்டிலிருந்தே உணவை ஆர்டர் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலை இல்லாதவர்கள் Zomato வில் சேர்ந்து சம்பாரிக்க ஆரம்பிக்கிறார்கள். அன்னைக்கு வெறும் மூன்றே பேர் பார்த்த வெப்சைட்டில் இன்று 13 லட்சம் பேர் ஒரே நாளில் ஆர்டர் செய்கிறார்கள். 24 நாடுகள், 8600 கோடி Revenue, 3.5 லட்சம் டெலிவரி பார்ட்னர்ஸ் என்று Zomato இன்று வேற லெவலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அன்னைக்கு Deepinder வரிசையில் நின்றதால்தான் இன்று Zomato கம்பெனியே உருவாகியிருக்கிறது. அடுத்த முறை உணவு ஆர்டர் செய்யும்போது, இந்த கதை நினைவிற்கு வருமில்லையா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com