பணம் பற்றிய உண்மை தெரியுமா?

Do you know the truth about money?
Do you know the truth about money?
Updated on

ணம் சம்பாதிப்பதற்கு கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. சரியான இடத்தில், சரியான திசையில் நாம் உழைக்கிறோமா என்பது மிகவும் முக்கியம்.

தினசரி எட்டு மணி நேரம் உழைத்து மாதம் 6,000 சம்பாதிப்பவரும் உண்டு. தினசரி 3 மணி நேரம் உழைத்து, மாதம் 300 டாலர் சம்பாதிப்பவர்களும் உண்டு.

ஒரேயடியாக அதிக பணம் சம்பாதிக்க முயற்சிப்பதற்கு பதிலாக, ஆறு போன்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் தொடர்ச்சியான சம்பாத்தியம் மிகவும் நல்லது.

It's Better to be like River than Gold.

நாம் ஒருவருடன் பழகுவதற்கும் அல்லது விட்டுச் செல்வதற்கும் பணம் பிரதானமாக இருந்தால், நம்மிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.

"Loyalty and Cheating Is a choice, not an Incident"

நீங்கள் அதிகமாக பணம் ஈட்ட விரும்பினால் முதலில் பணத்தின் மீது பற்று வையுங்கள். அதன் முக்கியத்துவத்தை முதலில் உணருங்கள். கையில் காசு இல்லாமல் அன்பு பாசம் என்று பேசுபவர்களிடம் பணம் என்றும் சேராது.

இவ்வுலகில் வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருக்கத்தான் செய்வான். உங்களை விட திறமையானவர் களையும், பணம் அதிகம் வைத்துள்ளவரையும் பார்த்து பொறாமை அடைவதற்கு பதிலாக, நீங்களும் அதுபோல் மாறுவதற்கான செயலில் இறங்குங்கள்.

இங்கே பெரும்பாலானவர்கள் பணம் முக்கியமில்லை என்று கூறிவிட்டு, அதன் பின்னால் தன் சுற்றிக் கொண்டு திரிகிறோம். எனவே நம்மால் அதிகபட்சம் எவ்வளவு தான் சம்பாதிக்க முடிகிறது என்பதை ஒரு முறையாவது முயற்சித்து பார்த்துவிடுங்கள்.

யாரையும் எதையும் எதிர்பார்க்காமல், உங்கள் திறமையை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தால், வெற்றி வாய்ப்புகளை உங்களுக்கு வசமாக நீங்கள் மாற்ற முடியும்.

சற்று யோசித்துப் பார்த்தால், நீங்கள் விரும்பும் அனைத்து விதமான விஷயங்களும் உங்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் தான் இருக்கிறது.

பைக், கார், ஐபோன், மின்சாதனம், மெத்தை, டிவி, ஏசி போன்றவற்றின் ஷோரூம்கள் உங்கள் வீட்டின் அருகில் தான் இருக்கும். ஆனால் At the end of the Day அதை அடைவதற்கு நாம் என்ன செய்தோம் என்பதுதான், இங்கே அனைவருக்குமான வித்தியாசம் என நினைக்கிறேன். 

உங்களுடைய முழு ஆற்றலையும் கண்டு பிடிக்காமலேயே இறந்து விடாதீர்கள். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தைரியமாக இறங்குங்கள்.

logo
Kalki Online
kalkionline.com