அறிவியல் வளர்ச்சிக்கு காரணம் எது தெரியுமா? ஆசையே!

motivation image
motivation imagepixabay.com

சைப்படாமல் இருந்திருந்தால் உலகத்தில் உள்ள எந்த விதமான கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்து இருக்காது. எதிலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்க முடியாது. ஆதலால் ஆசை அலை போன்றது. கடல் அலைகள் ஓய்ந்தால்தான் மன அலைகள் ஓயும். அப்படி ஓயுமா என்ன இரண்டும்? ஆகவே ஆசைப்பட வேண்டியதுதான். அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்! 

எதற்குமே ஆசைப்படாதவராக இருப்பதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய தைரியம்:

தன்னிடம் அதிகமான பொருள் செல்வம் இருக்கிறது. அதை ஒருவருக்கு தானமாக கொடுத்து விட்டால் ஆஹா இவ்வளவு கொடுத்து விட்டோமே என்றும் கர்வம் கொள்ளக்கூடாது. அப்படி கொடுத்த பொருளை வாங்கியவர் என்ன செய்கிறார் என்றும் நோட்டமிடக்கூடாது. இதுபோல் இருப்பதைதான், பகவான் ராமகிருஷ்ணர் விரும்பினார். 

பகவான் ராமகிருஷ்ணரிடம் ஒருவன் வந்து "ஆயிரம் பொற்காசுகளும் உங்களுக்கு என் காணிக்கை" என்று வைத்தான். "நிஜமாகவே எனக்கு இவை தரப்பட்டனவா "என்றார். ஆம் என்றான். அப்படியானால் இதை கொண்டு போய் கங்கையில் கொட்டி விட்டு வா என்றார். அந்த மனிதனால் அது முடியவில்லை. வேதனையோடு ஒவ்வொன்றாக தடவி தடவி ஆற்றில் போட்டான். பின்னால் வந்த ராமகிருஷ்ணர் "முட்டாள் பணத்தை சேகரிக்கும்போது எண்ணுவது நியாயம். தியாகம் செய்யும்போது ஏன் எண்ணுகிறாய்? தியாகத்திற்கு கணக்கு வேண்டாம் "என்றார். 

ஆசை என்பது அமுதம். பேராசை என்பது ஆலகால விஷம்:

குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். படிக்க வைக்க வேண்டும். அவர்களை நல்லவர்களாக வளர்த்து ஆளாக்கி நல்ல பணியில் சேர்த்து விட வேண்டும் என்று ஆசைப்படுவது நியாயமானது. எல்லோரும் செய்யத்தக்கது. செய்ய வேண்டியது. 

அதற்காக குழந்தை விரும்பாத ஒரு பாடத்தை திணித்து, நான் படிக்காததை நீ படித்துதான் ஆக வேண்டும். அதில் பெரியவனாக புகழ்பெற்றவனாக திகழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தி தன் விருப்பத்தை அதில் நுழைப்பது தான் பேராசை. இதனால் குழந்தையின் ஆற்றலுக்கு அதிகமாக ஒரு செயலை செய்ய வற்புறுத்துவதால் அவனால் அதற்கு மேல் ஈடு கொடுக்க முடியாமல் கீழ்மட்டத்திற்கு வந்து விழுந்து விடுவான். அப்பொழுது அவனால் சாதாரணமாக படித்து நல்ல நிலைக்கு வந்திருக்கக் கூடிய நிலைமையை கூட எட்ட முடியாமல் போகும்.

ஆசை பேராசையாகப் பெருகும் போது ஒருவர் இருப்பதையும் இழந்து நிற்பார்: ஒரு மனிதன் தான் வசிக்கும் வீட்டை விட பெரிய வீடு, இப்போதைய வேலையை விட உயர்ந்த வேலை, கார், பிற வசதிகளை அடைய விரும்புவது ஆசை. ஆனால் அவை கிடைக்கும் வரை இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். 

அதை விடுத்து இந்த லோனை கட்டி முடிப்பதற்குள் இன்னும் பெரிதாக திட்டமிட்டால் இரண்டையும் சரிவர செய்ய முடியாமல் திட்டமிட்டதை செயல்படுத்த முடியாமல் திண்டாடி தவிர்க்க வேண்டி வரும். பிறகு கஷ்டப்பட்டு கட்டிய வீட்டையே விற்றுவிட்டு கடன் அடைத்தவர்களின் நிலையை கண்டு பரிதாபம் அடைந்த சம்பவங்களும் உண்டு. 

கூரை செம்மையாக போடப்பட்ட வீட்டில், மழை நீர் இறங்காதது போல், நல்ல பண்புள்ள மனத்தில் ஆசைகள் நுழைய முடியாது:

இதையும் படியுங்கள்:
சிறந்த மனிதராக மாறுவதற்கான வழிகள்!
motivation image

எதையும் தீர ஆலோசித்து திட்டமிட்டு ஒரு செயலில் இறங்குபவர்களிடம் சென்று, மற்றவர்கள் யாராயிருந்தாலும் அதிக வளர்ச்சி அடைய மற்ற விதங்களில், சேமிப்பு கணக்கைப்பெருக்கு, அங்கு இப்பொழுதே பிளாட்டை வாங்கி போடு, கிரெடிட் கார்டு எல்லாவற்றையும் உபயோகப்படுத்தி 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' மெல்ல கடனை அடைக்கலாம் என்று எப்படித்தான் ஆசை மொழி கூறினாலும் அதற்கு அவர்கள் மயங்க மாட்டார்கள். நிதானமாக பயணிப்பார்கள். அதேபோல் மற்றவர்கள் நம்மை விட நன்கு வளர்ச்சி அடைந்து விட்டார்களே என்று பொறாமையும் பட மாட்டார்கள். இதைத்தான் நல்ல பண்புள்ள மனதில் ஆசைகள் நுழைய முடியாது என்று கூறுகிறார் புத்தர். ஏனென்றால் அஸ்திவாரம் அப்படி போடப்பட்டிருக்கிறது. 

நம் தகுதிக்கேற்ற ஆசையாய் அது இருக்கும் பொழுது பிரச்சனை இல்லை. அது பேராசையாய் மாறும் பொழுது தான் மேற்கூறிய பிரச்சனைகள் நிகழ்கின்றன, என்பதை மனதில் நிறுத்துவோம்! ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com