ஒருவருடைய மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப் படுகிறது தெரியுமா?

Do you know what determines one's worth?
Do you know what determines one's worth?age Credits: Freepik
Published on

ந்த உலகில் ஒருவருடைய மதிப்பு  என்பது உருவத்தை வைத்தும், பணத்தை வைத்தும், அழகை வைத்தும், ஸ்டேடஸை வைத்தும் மதிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே ஒருவருடைய மதிப்பு என்பது எதை வைத்து தீர்மானிக்கப்பட வேண்டும் தெரியுமா? அதற்கு இந்த கதையை முழுமையாக படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் தையல்காரரும், அவருடைய மகனும் வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் அந்த தையல்காரர் துணியை தைப்பதை அந்த பையன் பார்க்கிறான். பளபளப்பாக இருக்கும் கத்தரிக்கோலை எடுத்து ஒரு துணியை இரண்டாக வெட்டுகிறார் அவன் தந்தை  அதன் வேலை முடிந்ததும், அந்த கத்தரிக்கோலை தன்னுடைய காலுக்கு கீழ் போட்டுவிட்டு வேலையை தொடர்ந்து பார்க்க ஆரம்பிக்கிறார்.

அதேபோல துணியை தைத்து முடிந்ததும் அந்த ஊசியை எடுத்து பத்திரமான ஒரு இடத்தில் பாதுகாத்து வைக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த பையன் தன் தந்தையிடம் கேட்கிறான்.

‘அப்பா! அந்த கத்தரிக்கோல் விலை அதிகமானது. இருப்பினும் அதை காலுக்கு கீழே போட்டு  விட்டீர்கள். ஆனால் விலை மலிவான ஊசியை பத்திரமாக எடுத்து வைக்கிறீர்களே ஏன்?' என்று கேட்கிறான்.

அதற்கு தந்தையோ, என்னதான் கத்தரிக்கோல் அழகாகவும், விலை மதிப்பாகவும் இருந்தாலும் அதனுடைய வேலை வெட்டுவது, அதாவது பிரிப்பதாகும்.

ஆனால், என்னதான் ஊசி மலிவானதாகவும், சிறிதாகவும் இருந்தாலும் அதனுடைய வேலை சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பு என்பது அவர் செய்யும் செயலை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அவருடைய உருவத்தை வைத்தோ அல்லது அவருடைய பணத்தை வைத்தோ இல்லை என்று சொன்னாராம்.

இதையும் படியுங்கள்:
சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
Do you know what determines one's worth?

இன்று நம்மில் பலபேர் இவ்வாறுதான் இருக்கிறோம். அடுத்தவர்களுடைய ஆடம்பரம், அழகு, பளபளப்பு இதுபோன்ற வெளிப்புற தோற்றத்திற்கே அதிக மதிப்பு தருகிறோம். ஆனால் உண்மையிலேயே ஒருவருடைய மதிப்பு அவருடைய குணத்தை வைத்தும், செயலை வைத்தும், எண்ணத்தை வைத்துமே மதிப்பிடப்பட வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.

இதை தெளிவாக புரிந்துக்கொண்டு போலித்தனமானவர் களிடம் இருந்து விலகி நல்ல குணத்திற்கு மதிப்பளிக்கும் போது நம்மை சுற்றி நல்ல மனிதர்களை சம்பாதிக்க முடியும். நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com