சிந்தனையின் வலிமை என்ன தெரியுமா? 

Do you know what the power of thought is?
Do you know what the power of thought is?
Published on

ரு 24 வயது மதிக்கத்தக்க இளைஞன் முழுக்க முழுக்க கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து வருகிறான். சிறுவயது முதலே தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டான். ஒரு குறிப்பிட்ட வயது வரை, அவனுடைய குடும்பத்தினர் தனக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதையே தான் அவனது மூளை பற்றிக்கொண்டது. சுயமாய் சிந்தித்து செயல்படுவதற்கான சந்தர்ப்பங்களும் தேவைகளும், இல்லாமலேயே இருந்தது. 

ஆனால் எப்போது ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கு கற்பிக்கப்பட்ட விஷயங்கள் நிறுத்தப்பட்டு அவன் மீதான எதிர்பார்ப்புகளாக மாறியதோ, அங்கே அவன் அழுத்தத்தை உணர ஆரம்பித்தான். எங்கேயும் அவன் சுயமாக சிந்திக்க முடியாமல், பிறர் கூறுவதைக் கேட்டுகொண்டு, அதற்கேற்றவாறு முடிவுகளை எடுக்க நேர்ந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, அவன் மீதான எதிர்பார்ப்புகள் பன்மடங்கு உயர்ந்தது.

இப்படி இருக்க வேண்டும்,

அப்படி இருக்க வேண்டும்,

அவர்களைப் போல் ஆக வேண்டும்,

இவர்களைப் போல் ஆக வேண்டும்.

இது இருந்தால்தான், இப்படி இருந்தால் தான் மதிப்பார்கள்.

சுற்றி இருப்போர் அனைவருமே அவர்கள் அனுபவப்பட்ட, அவன் அனுபவிக்காத விஷயங்களை அவன் மீது திணித்து, சுயமாக சிந்திக்க முடியாத வகையில் செய்துவிட்டார்கள். அவனும் அதை ஏற்றுக்கொண்டு தலையாட்டி பொம்மை போல செவ்வனவே தன் வாழ்க்கையைக் கடத்தினான். உண்மையிலேயே அந்த வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. எந்த ஒரு கடினமான செயல்களும் கிடையாது. சரி இப்படியே இருந்துவிடலாம் என்று மனதும் அதை ஏற்றுக்கொண்டது. அதுவரையில் சுய சிந்தனை என்ற பேச்சுக்கே இடம் இல்லை அவன் மனதில்.

ஒருநாள் சுயமாக சிந்தித்து, சுற்றியிருப்போர் செய்யும் விஷயங்கள் தவறு என்பதை உணர்ந்து, தனக்கான முடிவுகளை எடுக்கத் தொடங்கியபோது, அவனைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் வேண்டாதவன் ஆகிவிட்டான்.

பிறருடைய எதிர்பார்ப்புகளுக்கு நாம் இசைந்து கொடுக்காதபோது, பலரால் இழிவுபடுத்த படுகிறோம் என்பதை அவன் உணர்ந்தான்.

சுற்றி இருப்போர் அனைவரும் அவனைத் தவறாகவே பார்த்தார்கள்.

  • அவன் காலையில் வெகு நேரம் கழித்து எழுவது மட்டுமே பிறருக்கு தெரிந்தது. ஆனால் அவன் இரவில் எத்தனை மணிக்கு தூங்கச் செல்கிறான் என்பதை யாரும் கவனிக்கவில்லை.

  • அவன் எந்த ஒரு செயலும் செய்யாதது போலவே பிறருக்கு தென்பட்டது. ஆனால் அவன் பிறரைக் காட்டிலும் பலமணிநேரம் செயல்படுவதை யாரும் அறியவில்லை.

தன் தேவை என்ன, தன் விருப்பம் என்ன, உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது, என பல நிலைகளை அனுபவப்பூர்வமாக அவன் உணர்ந்தபோது. சராசரி மனிதனைக் காட்டிலும், பெருமகிழ்ச்சி அவனைச் சூழ்ந்தது. இருந்தாலும், தன்னைச் சுற்றியிருக்கும் உலகம் தன்னை புரிந்துகொள்ளலாம் உதாசீனப் படுத்தும்போது, அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் அவன் தவித்தான்.

இருப்பினும் அவனுக்கு ஏற்பட்ட சுய சிந்தனை எனும் ஆற்றல், அவனைச் சுற்றியுள்ள பல விஷயங்களை தகர்த்து புதிய திசையை நோக்கி அவனை பயணிக்க செய்தது. பலர் அனுபவிக்காத புதுமையான அனுபவங்கள் அவனுக்குக் கிடைத்தது. இவை அனைத்துமே அவனது மாற்று சிந்தனையின் வலிமையாளும், அதற்கேற்றவாறு அவன் எடுத்த முடிவினாலும் தான் சாத்தியமானது. 

சிந்தனைகள் மிகவும் வலிமையானது, அனைத்தையும் சற்று மாற்றி சிந்தித்தால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com