மூளையின் சூட்சுமம் என்ன தெரியுமா?


Human brain
Human brainpixabay.com
Published on

‘மூர்த்தி சிறிசு... ஆனால் கீர்த்தி பெரிசு’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இப்படிச் சொல்வதற்கு மிகப் பொருத்தமானது நமது உடல் உறுப்புகளிலேயே சிறந்ததான மூளை. அளவில் சிறிய மூளையின் செயல்களைப் பார்க்கும்போது அதன் கீர்த்தி மிகப் பெரியது என்பது பிரமிப்பைத் தருகிறது.

மிகவும் மர்மமான உறுப்பு எனப்படும் மூளையைப் பற்றி நாம்  ஆராயும்போதும் நாம் அந்த மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான உறுப்பான  மூளை நமது நினைவுகள், ஆளுமைத்திறன், அறிவாற்றல், அன்றாட செயல்களின் நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்தும் முக்கியமான உறுப்பாகிறது. நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடேங்கப்பா என வியக்க வைக்கும் தகவல் இது.

மூளை எனும் மிக மென்மையான பகுதியின் செயல் மட்டும் இல்லையெனில் மனிதன் வெறும் நடைப் பிணமாகத்தான் வாழமுடியும். 

இந்த மூளை எனும் சாதனம் நம் வெற்றிக்குப் பெரும் உதவியாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘இது தெரியாதா? மூளையினால்தானே அறிவோடு இருக்கிறோம்’ என்று கேட்கிறீர்களா? ஆம் நீங்கள் சொல்வது சரிதான்… இது இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கும் கொடை. ஆனால், அதில் இருக்கும் சூட்சுமத்தைப் பயன்படுத்தினால் விரைவான வெற்றி பெறலாம்.


லகின் மிகச்சிறந்த அலாரமாக மனித மூளை செயல்படுகிறது. நீங்கள் அதிகாலை எழ வேண்டும் என்று விரும்பி படுப்பதற்கு முன் தலைமாட்டில் செல்போனில் அலாரத்தை செட் செய்துவிட்டுத் தேமே என்று தூங்குவீர்கள். அலாரமும் அடிக்கும். எழுந்து பார்த்தால் விடிந்து வெகுநேரமாகி இருக்கும். சே... இந்த அலாரம் நம்மை ஏமாற்றிவிட்டது என அலுத்துக்கொள்வீர்கள்.

உயிரற்ற அலாரத்தை நம்பிய நீங்கள், உங்கள் உடலில் எந்நேரமும் விழிப்புடன் இயங்கும் மூளையிடம் சொல்லிவிட்டுத் தூங்கியிருந்தால், நீங்கள் நிர்ணயித்த நேரத்தில் உங்களை விழிக்க வைத்திருக்கும் உங்கள் மூளை. ஆம். நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக்காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும். நம்மை வழி நடத்தும் பிரபஞ்சத்திடம் நமது குறிக்கோள்களை தெரிவிக்கும் முதல் சாதனம் ஆகிறது நம்மிடம் உள்ள மூளை.  இதை நமது வெற்றிக்குப் பயன்படுத்துவதன் சூட்சுமம் நம் கையில்.

இதையும் படியுங்கள்:
தும்பை இருக்க தூரப் போகும் நோய்கள்!

Human brain

நமது மூளையில் சேமித்து வைக்கும் எண்ணங்களில் முதலிடத்தை நமது இலக்குகளுக்காக ஒதுக்குவோம். தேவையற்ற எண்ணங்களைத் தவிர்த்து வெற்றிக்கான வழிகளை மூளையில் சேமித்துவைத்தால் தகுந்த நேரத்தில் நமக்கு நினைவுபடுத்தி (அலாரம் அடித்து) வெற்றியின் பாதையை அடையாளப்படுத்தும். இதுதான் மூளையின் சூட்சுமம். இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றிக்கு ஆயத்தமாவோம்.

இனி யாரிடமும்  மூளை இருக்கா? மூளை மழுங்கிப் போச்சா? என்றெல்லாம் கேட்காதீர்கள். அப்புறம் உங்கள் மூளை உங்களிடம் கோபித்துக்கொள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com